சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் பல்வேறு வகையான நிலங்களில் வாழும் மக்களுக்கு குடிமனைப் பட்டா, கிரயப்பத்திரம் வழங்கக் கோரி முதலமைச்சரிடம் ஒரு லட்சம் பேர் மனு கொடுக்கும் இயக்கம் சென்னையில் நடைபெற்றது. இதை தொடர்ந்து ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்கிட தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்க முதலமைச்சர் உறுதியளித்தார்.
கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை குறித்து இந்தியாவில் கம்யூனிசம் என்னும் நோய்க்கிருமி முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என விமர்சித்த பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதிக்கு சிபிஎம் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரம் உலக கோப்பை போட்டியில் சாதனை படைத்த வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக சென்னை சர்வதேச விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் அமையவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.









