திருப்பூரில் புற்றுநோய் நவீன கதிரியக்க சிகிச்சை மையம் திறப்பு 100 படுக்கை கொண்ட புற்றுநோய் மருத்துவமனைக்கு அடிக்கல்
திருப்பூர், பிப்.24 – திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனை வளாகத்தில் ரூ.37 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புற்றுநோய் நவீன கதிரி யக்க சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட் டது. அத்துடன் 100 படுக்கை வசதி கொண்ட புற்றுநோய் மருத்துவமனை 60 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் நான்குமாடி கட்டிடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. திருப்பூரில் நன்கொடையாளர்கள் பங்க ளிப்புத் தொகை ரூ.30 கோடி, அரசுப் பங்க ளிப்பு ரூ.60 கோடி என நமக்கு நாமே திட்டத் தில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் அதிநவீன புற்று நோய் சிகிச்சை மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த மூன்றாண்டு காலமாக அரசு மற்றும் சுழற்சங்கம் உள்ளிட்ட தன்னார்வலர்கள் முயற்சி மேற்கொண்டனர். அதன்படி செவ்வாயன்று அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத் தில் ரூ.37.50 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் நவீன கதிரியக்க சிகிச்சை மையம் கட்டி முடிக் கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அத்துடன், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் புத்து ணர்வு மையமும் திறந்து வைக்கப்பட்டது. மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாநில மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் ஆகியோர் இந்த புதிய மருத் துவ சிகிச்சை மைய கட்டிடங்களைத் திறந்து வைத்தனர். அத்துடன் கதிரியக்க சிகிச்சை மையத் திற்கு அருகில் ரூ.19.40 கோடி மதிப்பீட்டில், சுமார் 60 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் நான்கு மாடி புற்று நோய் சிகிச்சை மருத்து வமனைக்கும் அமைச்சர்கள் அடிக்கல் நாட்டி னர். இந்நிகழ்வில் அமைச்சர் மு.பெ.சாமிநா தன் பேசியதாவது: தற்போது, 2,000 க்கும் மேற் பட்ட புற்று நோய் மருத்துவப்பயனாளர்கள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் கதிர் வீச்சு சிகிச்சை செலவு, மருத்துவப்பயனாளர் ஒரு வருக்கு சுமார் ரூ.1.50 லட்சம் அல்லது மருத்து வப்பயனாளர் உடல் நிலையை பொறுத்து அதற்கு மேலும் கூட ஆகும். இப்போது, திருப் பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம னையில் கதிர்வீச்சு சிகிச்சை சேவைகள் துவங்கப்படவுள்ளதால், இதன் மூலம் பொது மக்களுக்கு இலவசமாக சிகிச்சை வழங்க இயலும். இங்கு அமையும் இந்த மருத்துவ மனை திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநில மக்களுக்கும் சிகிச்சை பெறுவ தற்கு நல்ல சூழ்நிலை எதிர்காலத்தில் உருவா கும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறி னார். திருப்பூரில் அமையும் புற்றுநோய் மருத் துவமனை முன்மாதிரியானதாக அமையும். கூடுதலாக பல்வேறு வசதிகளையும் கொண்டு ரூ.200 கோடி மதிப்பீட்டில் அமைத் தால் உலகப் புகழ்பெற்ற மருத்துவமனை யாக இது திகழும் என்று மருத்துவர் முருகநா தன் கூறினார். முன்னதாக மருத்துவக் கல் லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் மனோன்மணி வரவேற்றார். துணை முதல் வர் மருத்துவர் பத்மினி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக் கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமைச் செயலர் ப.செந்தில்குமார், தேசிய சுகாதார இயக்க மேலாண்மை இயக்குநர் ஏ.அருண் தம்புராஜ், மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரண வரே, திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க.செல்வ ராஜ், மேயர் ந.தினேஷ்குமார், ரோட்டரி சங் கத்தின் சார்பில் மருத்துவர் ஏ.முருகநாதன் உள்ளிட்ட நன்கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.
