தமிழகம்

 

மதுரை,

தமிழகத்தில், அரசு பள்ளிகளில் சத்துணவு முட்டை கொள்முதல் ஒப்பந்தத்திற்கான அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 48 லட்சம் முட்டைகளை கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்திற்கான அரசாணை தமிழக அரசு வெளியிட்டது.

முட்டை கொள்முதல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை முறையாக இல்லை எனவும், நிறைய பாகுபாடு இருப்பதாகவும் கூறி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில் முட்டை டெண்டர் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், அரசுப் பள்ளிகளில் சத்துணவு முட்டை கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்திற்கான அரசாணை 57-ஐ ரத்து செய்து உத்தரவிட்டது.

மாவட்டச் செய்திகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சம்மேளனக் கூட்டம் திருப்பூர் சிஐடியு அலுவலகத்தில் சம்மேளனத் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சம்மேளனப் பொதுச் செயலாளர் கே.ஆர்.கணேசன், பொருளாளர் விருதுநகர் பாலசுப்பிரமணியம், கிராம ஊராட்சிகள் இணைப்புக்குழு தலைவர் ப.சண்முகம் மற்றும் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உள்பட சம்மேளனக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அலுவலக முகப்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சம்மேளனக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மாநில அரசு அரசாணை 62 (2பி) படி நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சியில் பணியாற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு…

மாநிலச் செய்திகள்

 

புதுச்சேரி,

ஹெல்மெட் அணியாமலும், சாலை விதிமீறல்களில் ஈடுபட்டவர்களையும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடுத்து நிறுத்தி எச்சரிக்கும் பணிகளை மேற்கொண்டார்.

புதுச்சேரியில் இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் இந்திரா காந்தி சதுக்கம் அருகே போக்குவரத்துக் காவலர்களுடன் இணைந்து கிரண் பேடி வாகன சோதனையில் ஈடுபட்டார். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை கேள்வி எழுப்பிய அவர், பிற விதிமீறல்களில் ஈடுபட்டவர்களையும் தடுத்து மடக்கிப் பிடித்துக் கண்டித்தார்.

இதனிடையே புதுச்சேரியில் காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரம் நடைபெற்றது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தும், அறிவுரை கூறியும் போலீஸார் அனுப்பி வைத்தனர்.

ஆசிரியர் பரிந்துரை

பி.எஸ்.என்.எல்நிறுவனத்தை முடமாக்கும் மத்திய அரசை எதிர்த்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடும் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண  அரசு முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாகவே காப்பாற்றப்பட வேண்டும்;4ஜி அலைக்கற்றை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்; சேவை விரிவாக்கத்திற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்க அனுமதிக்க வேண்டும்;  12  ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊதியம் மாற்றம் செய்யப்படாமல் இருப்பதை கைவிட்டு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 2 லட்சம் அதிகாரிகளும், ஊழியர்களும் ஒன்றுபட்டு பிப்ரவரி 18  முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மோடி அரசாங்கம் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், ஃவோடாபோன் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்துவிட்டது. அதே சமயம் தனது சொந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது கோடிக்கணக்கான பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களை பழிவாங்குவது மட்டுமின்றி, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்கு வழிவகுப்பதாகும்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் மக்களுக்கு சேவை அளிக்க வேண்டுமென்ற நோக்கோடு, சேவை விரிவாக்கத்திற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. அந்த கோரிக்கையையும் மத்திய அரசாங்கம் நிராகரித்துவிட்டது. அதே சமயம் தனியார் நிறுவனங்களுக்கு இந்திய நாட்டு வங்கிகளிடமிருந்து ரூ.8 லட்சம் கோடி அளவிற்கு கடன் கொடுத்துள்ள மோடி அரசு, பொதுத்துறைநிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு கடன் வழங்க மறுப்பது, பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தை முடமாக்கி, கார்ப்பரேட் நிறுவனங்களைவளர்க்கும்  நோக்கமே தவிர வேறில்லை என்பது தெளிவு. மத்திய அரசின் நடவடிக்கைகள் மூலம் பலகோடி பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள்பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கப்படுகின்றனர்.

மேலும் பி.என்.எஸ்.எல். ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஊதியம் மாற்றம் செய்யப்படாமல்இழுத்தடிக்கப்பட்டு வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த பின்பும் தீர்வு காண மத்திய அரசு மறுத்து வருகிறது. எனவே, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை அழிவிலிருந்து பாதுகாத்திடவும், தங்களது ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராடிவருகின்றனர். இதனால் தொலைதொடர்பு வசதிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

நியாயமான கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை எஸ்மா சட்டம் மற்றும் F.R 17-A என்கிற பிரிவைபயன்படுத்தி மிரட்டவும், வேலைநிறுத்தத்தை ஒடுக்கவும் முயற்சிக்கிறது மத்திய அரசு. அதை முறியடித்து 3-வது நாளாக வெற்றிகரமாக  வேலைநிறுத்தத்தை நடத்தி வருகின்றனர் பிஎஸ்என்எல் ஊழியர்கள்.  னவே, பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகளை முறையாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின்கோரிக்கைகளை நிறைவேற்றி சுமூகத் தீர்வு காண வேண்டுமெனவும், ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிடவேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

 

MORE ARTICLES

அந்த கரடி  காறித்துப்பிய எச்சில்…! – சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் கவிதை..
Inspired by Valluvar –+++++++++++++++— முகத்தைக் கழுவியதும் போய்விட்டது, அந்த கரடி காறித்துப்பிய
இன்றைய தேவை குடிமைப் பயிற்சி : பேரா. க.பழனித்துரை காந்தி கிராம பல்கலைக்கழகம்
‘‘அரசாங்கம் நமது கேடுகளின் விளைவு, சமூகம் மக்கள் தேவைகளின் அடிப்படையில் உருவாவது, சமூகம்
முகிலனை விரைவில் கண்டுபிடித்திடுக: சிபிஎம்
காவல்துறை துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ பதிவு மற்றும் ஆவணங்களை சென்னையில் பத்திரிகையாளர்களிடம் வெளியிட்ட
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: சிபிஐ விசாரணைக்கு தடைகோரி தமிழக அரசு மனு – உச்சநீதிமன்றம் நிராகத்தரிப்பு
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை தன்னிச்சையாக இருக்க
ரபேல் ஊழல்: உயர்மட்ட அளவில் விசாரணை நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவுறுத்தல்
புதுதில்லி, பிப்.11- ரபேல் போர்விமானங்களை வாங்கியதில் உள்ள ஊழல் தொடர்பாக உயர்மட்ட அளவில்
கட்டுரை

===பி.ராஜீவ்===
தேசாபிமானி முதன்மை ஆசிரியர்
கேரளத்தின் மூவாற்றுப்புழாவில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடைப்பயண நிறைவு மாநாட்டைத் துவக்கி வைப்பதற்கு நான் சென்றபோது மேடையிலேயே இரண்டு கிறிஸ்தவ மதக்குருமார் இருப்பதைப் பார்த்தேன். அவர்கள் விருந்தினர்களாக வந்திருப்பார்கள் என்று முதலில் நான் கருதினேன். ஆனால் அவர்கள் இருவரும் நடைப்பயணத்தில் முழுமையாகப் பங்கேற்றவர்கள் என்பதைத் தங்களை அறிமுகம் செய்து கொண்டபோது தெரிவித்தார்கள்.

அவர்கள் பாதிரியார் போள் தாமஸ் பீச்சியில் மற்றும் பாதிரியார் பிஜூ தாமஸ் சக்ரவேலி ஆகியோர் ஆவர். இந்த இருவரும் கூத்தாட்டுக் குளம் பகுதியின் பாலக்குழையைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள். கட்சி உறுப்பினர்களாக மதக்குருமார்கள் இருக்கிறார்களே என்று பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இது சிறுபான்மையினர் விஷயத்தில் கட்சி பின்பற்றுகிற நெகிழ்ச்சியான அணுகுமுறையாக இருக்கலாம் என்று சிலர் குறிப்பிட்டதைக் கேட்டேன்.
பாலக்குழைக்கு பக்கத்தில் உள்ள கோலஞ்சேரிப் பகுதியைச் சேர்ந்த வெண்ணிக்குளம் உள்ளூர் கமிட்டிச் செயலாளராகிய சனல்குமார், அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு முழுநேர ஊழியராக ஆகும்வரை அவர் தொழில் செய்து வந்தது ஒரு அர்ச்சகராகத்தான். சமஸ்கிருதக் கல்லூரியில் எம்.ஏ.சமஸ்கிருதம் படித்து வந்த காலத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினராக இருந்த சனல்குமார் அன்றும் பூசை நடத்தித்தான் தன் குடும்பத்திற்கும் தனக்கும் தேவையான வருமானம் சம்பாதித்தார்.

மதக்குருமாரும் அர்ச்சகரும் கட்சி உறுப்பினர் ஆக முடியுமா என்கிற கேள்வி மிகப் பழைய கேள்வியாகும். தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ‘சிந்தா’ வார இதழில் கேள்வி – பதில் பகுதியில் பலமுறை இதற்குப் பதிலளித்து வந்திருக்கிறார். ‘தி அட்டிட்யூட் ஆஃப் ஒர்க்கர்ஸ் பார்ட்டி டு ரிலிஜன்’ (மதம் தொடர்பான தொழிலாளர் வர்க்கக் கட்சியின் அணுகுமுறை) என்ற கட்டுரையில் லெனின் இதே கேள்வியையே எதிர்கொண்டிருக்கிறார். ஒருமதக்குரு பொதுவான அரசியல் பணிகளில் பங்கேற்று, உணர்வுப்பூர்வமாகக் கட்சியின் பொறுப்புகளை நிர்வகித்து, கட்சித் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் எந்தவொரு குருமாரும் கட்சியின் உறுப்பினராகலாம் என்று லெனின் பதிலளித்தார். (லெனின் தொகுப்பு நூல்கள் தொகுதி 15) மதத்திற்கு எதிராகப் போராடி அதை இல்லாமற் செய்ய முடியாது என்பதையும்; அதன் வேர்களைக் கண்டறியாமல் அணுகுவதையும், மதவெறுப்பு நிலைபாட்டையும், கடவுள் மறுப்பு வாதத்தையும் ஒரு முழக்கமாக ஆக்குகிற நிலைபாடு தொழிலாளி வர்க்கக் கட்சிக்கு இல்லை என்பதையும் லெனின் தெளிவாக்கியிருக்கிறார். ‘மதம் ஒழியட்டும், கடவுள் மறுப்புவாதம் நீடுழி வாழட்டும்’ என்பது எதிர்ப்புரட்சி நிலைபாடாக இருக்கும் என்றும் லெனின் தெளிவாக்கியிருக்கிறார்.

வர்க்கப் போராட்டக் கலையும் விஞ்ஞானமும்
மதத்தைப் பற்றிய அணுகுமுறையைத் தெளிவாக்குகிற அறிக்கை ஒன்றை 1980 அக்டோபரில் கியூப கம்யூனிஸ்ட் கட்சி…

தேசம்

மும்பை,

மும்பையில் பேருந்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தானே மாவட்டம் காஷிமிராவில் உள்ள வணிக வளாகம் அருகே நேற்று காலை திடீரென பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பதறி அடித்துக் கொண்டு வந்து பார்த்தபோது, அங்குள்ள மும்பை – ஆமதாபாத் சாலையில் குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு வெடித்து இருந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்து சோதனை செய்தனர். இதில் அங்கு நாட்டு வெடிகுண்டு வெடித்து இருந்தது தெரியவந்தது. போலீசார் அங்கு கிடந்த தடயங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து, ராய்காட் மாவட்டத்தில் மாநில போக்குவரத்து பேருந்து ஒன்றில் , நேற்று இரவு சக்தி…

நீதிமன்றம்
புதுதில்லி, ஜன.27-
கல்புர்கி கொலை மிகவும் ஆழமான ஒன்று என்றும் வரும் பிப்ரவரி 26 அன்று நடைபெறவுள்ள இதன் முழு விசாரணையையும் எதிர்கொண்டு சம்பந்தப்பட்ட அரசுகள் தயாராக இருந்திட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பகுத்தறிவாளர்கள் எம்.எம்.கல்புர்கி, கௌரி லங்கேஷ், நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு எதிராக, ஓர் ஒருங்கிணைந்த, நியாயமான மற்றும் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, கொலை செய்யப்பட்ட எம்.எம்.கல்புர்கியின் மனைவி, உமாதேவி கல்புர்கி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரோகின்டன் நரிமான் மற்றும் வினீத் சரன் ஆகியோரடங்கிய அமர்வாயம், இது மிகவும் ஆழமான பிரச்சனை என்றும், இது தொடர்பாகத் தங்கள் மாநில அரசின் கருத்துக்களுடன் வரும்…

விளையாட்டுச் செய்திகள்
22
Feb
புதுடெல்லி, புதுடெல்லியில் நடந்துவரும் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பைப் போட்டிக்கு இரு பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க இந்தியா மறுத்ததால், சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு இந்தியாவுக்கு கடும் தண்டனை
0 secs 0
தலையங்கம்
இளைய தலைமுறை காப்போம்
Theekkathir
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்குற்றங்கள் இடைவிடாமல் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதுகுறித்து தொடர்ந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குரல் எழுப்பி வருகிறது. ஆனால் அரசு நிர்வாகம் தனது காதுகளையும் கண்களையும் இப்பிரச்சனையில் இறுக
பாஜகவிற்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே பரிகசிக்கத்தக்க விதத்தில் நடைபெற்ற சண்டை -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
Theekkathir
உச்சநீதிமன்றம், கொல்கத்தா காவல்துறை ஆணையர், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ-இன்)முன்பு ஒரு நடுநிலையான இடத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அதே சமயத்தில் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம், மேற்படி காவல்துறை ஆணையரைக் கட்டாயப்படுத்தும் விதத்தில் நடவடிக்கை எதையும் எடுக்கக்கூடாது என்றும்