சென்னை,மே,23- கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
வெயிலின் தாக்கம் பொறுத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்த நிலை தற்போது தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் ஜூன் 2-இல் பள்ளிகளைத் திறப்பதற்கான அறிவுறுத்தல்களைத் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.