tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

மெட்டா ஏஐ-இல்  வாய்ஸ் மோட் அம்சம் சோதனை!

வாட்ஸ் அப்பில் வழங்கப் பட்டுள்ள மெட்டா ஏஐ வசதியில் வாய்ஸ் மோட் (Voice  Mode) அம்சம் சோதனை செய்யப் பட்டு வருகிறது.  வாட்ஸ்அப்பில், மெட்டா ஏஐ சாட்பாட் வசதி கடந்த ஆண்டு அறி முகம் செய்யப்பட்டது. ChatGPT, Gemini, Perplexity மற்றும் Claude போன்ற ஏஐ சாட்பாட்களை போலவே, மெட்டா ஏஐ-யும்  கேள்விகளுக்கு பதிலளிக்கவும், உரைகளை புகைப்படங்களை உருவாக்கவும் உதவுகிறது. இதன் தொடர்ச்சியாக வாட்ஸ்அப்பின் மெட்டா ஏஐ-இல் வாய்ஸ் மோட் அம்சத்தை மெட்டா நிறுவனம் சோதனை செய்து வருகிறது.  WABetaInfo அறிக்கையின்படி, கடந்த சில மாதங்களாக வாய்ஸ் மோட் அம்சத்தை சோதனை செய்து வருகிறது. ஆனால், தற்போது ஆண்ட்ராய்டு 2.25.21.21 க்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. மெட்டா ஏஐ-க்கு சென்று பயனர்கள் சாட் டேபை கிளிக் செய்தால், ஆப்ஷனில் அலைவடிவ ஐகான் காண்பிக்கும், அதனை கிளிக் செய்து வாய்ஸ் மோட் அம்சத்தை தொடங்கலாம்.

ஐஓஎஸ் 26 பொது பீட்டா வெர்ஷன் வெளியீடு!

ஆப்பிள் நிறுவனம், அதன் ஐஓஎஸ் 26 பொது பீட்டா வெர்ஷனை வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அப்டேட்டான ஐஓஎஸ் 26 பொது பீட்டா வெர்ஷனில் ‘லிக்விட் கிளாஸ்’ எனப்படும் காட்சி வடி வமைப்பு யூசர் இன்டர்பேஸ் பயன் படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்களும், பிற மேம்பாடுகளும் வழங்கப் பட்டுள்ளன. ஐஓஎஸ் 26 பொது பீட்டா வெர்ஷனை பதிவிறக்கம் செய்ய Apple Beta Software Program இணையதளத்திற்கு சென்று Sign up செய்ய வேண்டும். பயனர்கள் தங்கள் ஆப்பிள் ID மற்றும் மற்ற விவரங்களை வழங்கி பீட்டா சோத னையாளராக ஆகலாம். பிறகு Settings-க்கு சென்று “General” என்பதை கிளிக் செய்து “Software Update” என்பதை கிளிக் செய்ய வும். அதில் iOS 26 Public Beta என்பதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இது, ஐஃபோன் 16இ, ஐஃபோன் 16, ஐஃபோன் 16 பிளஸ்,  ஐஃபோன் 16 ப்ரோ, ஐஃபோன் 16 ப்ரோ Max, ஐஃபோன் 15, ஐஃபோன் 15 Plus, ஐஃபோன் 15 ப்ரோ, ஐஃபோன் 15 ப்ரோ Max, ஐஃபோன் 14, ஐஃபோன் 14 Plus, ஐஃபோன் 14 ப்ரோ, ஐஃபோன் 14 ப்ரோ Max, ஐஃபோன் 13, ஐஃபோன் 13 ப்ரோ Max, ஐஃபோன் 12,  ஐஃபோன் 12 mini, ஐஃபோன் 12 ப்ரோ, ஐஃபோன் 12 ப்ரோ Max, ஐஃபோன் 11, ஐஃபோன் 11 Pro, ஐஃபோன் 11 Pro Max, ஐஃபோன் எஸ்.இ (2ஆவது தலைமுறை மற்றும் அதற்கு பிந்தைய மாடல்கள்) ஆகிய மாடல்களில் இயங்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.