அடக்குமுறைகளை எதிர்த்து நெஞ்சுறுதியுடன் போராடிய பெண்ணுரிமைப் போராளி
தோழர் ஷாஜாதி நூற்றாண்டு விழா
தமிழகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். 1973 இல் திண்டுக்கல்லில் நடந்த அமைப்பு கூட்டத்திலும் பின்னர் திருவாரூரில் நடந்த சங்கத்தின் முதல் மாநில மாநாட் டிலும் அமைப்புத் தலைவர்களில் ஒரு வராக பணியாற்றியவர். சென்னை யில் 1981 இல் நடைபெற்ற மாதர் சங் கத்தின் முதல் அகில இந்திய மாநா ட்டில் தோழர்கள் சுசிலா கோபாலன் , அகல்யா ரங்கனேகர் ஆகியோருடன் தலைமை குழுவில் இடம் பெற்றவர். சமூக விரோதிகள் கட்சியின் மீது தாக்குதல் நடத்திய போது கையில் கொடியுடன் கூடிய தடியை வைத்துக் கொண்டு நெல்லிக்குப்பம் நகரின் அனைத்து முக்கிய வீதிகளிலும் வீறு கொண்டு நடந்து வந்த நிகழ்வு அவரது துணிச்சலுக்கும் வீரத்திற்கும் எடுத்துக்காட்டாகும். விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மாவட்டங்களில் ஒன்று ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டம். சுதந்திர போராட்டம் வீறு கொண்டிருந்த நேர த்தில் பெண்களின் பங்களிப்பு மகத்தா னதாக இருந்தது. சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்பு துவக்கத்தில் பெண் விவசாய தொழிலாளர்களின் போராட்டம், ரயில்வே தொழிலாளர்கள் போராட் டத்தில் பெண்களின் பங்களிப்பு இந்திய தேசிய விடுதலையோடு சேர்த்து பெண்களின் உரிமைக்கான கோரிக்கைகளும் முதன்மைப் படுத்தப் பட்ட நேரத்தில் தென்னார்க்காடு மாவட்டத்தில் பெண்களைத் திரட்டி சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த நெல்லிக்குப்பம் ஷாஜாதி அவர் களின் பங்கு மகத்தானது. துணிச்சலுக்கு பெயர்பெற்றவர் ஷாஜாதி என்று சொன்னால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ரயில் மறியல் போராட்டத்தை ஒரு முறை அறிவித்த போது ரயில் மறி யலை தடுப்பதற்கு அனைத்து நட வடிக்கைகளையும் காவல்துறை எடுத்த போது நேரத்தைக் குறிப் பிட்டார்கள். நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தை குறிப்பிட்டார்கள். ஆனால் போராட்டத்திற்கு வந்தி ருந்த அனைவரும் ஆங்காங்கே தலை மறைவாக நின்று சிக்னல் கொடுக்கும் வரை யாரும் சம்பந்தப்பட்ட போராட்டக் களத்திற்கு வர வேண்டாம் என்று கூறினர். காவல்துறையோ போராட் டம் நடைபெறுமா இல்லையா என்று குழப்பத்தில் திக்கு முக்காடிக் கொண்டிருந்தது. ரயில் வந்தது குறிப் பிட்ட நேரத்தில் மறியல் போராட் டத்தை நடத்த ஷாஜாதி சிக்னல் கொடுக்க 150 க்கு மேற்பட்ட பெண்கள் ரயிலை மறித்தனர். பின்னர் அனை வரும் கைது செய்யப்பட்டனர். சிறைச்சாலையிலும் போராடிய ஷாஜாதி வளவனூரில் பிடிபட்டு வேலூர் சிறைக்கு கொண்டு வரப்படுவதற்கு இடைப்பட்ட காலத்தில் ஷாஜாதி, போலீஸ்காவலிலும் சிறைச் சாலை யிலும் பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருந்தது. கடலூர் காவல் நிலையத்தில் தனி அறையில் வைக்கப் பட்ட அவரை பம்பாயிலிருந்து வந்த ரகசியப் புலனாய்வு அதிகாரிகள் மிரட்டி விசாரணை செய்தனர். கட்சி யின் ரகசிய அமைப்பு குறித்து சொல்லும்படி நிர்ப்பந்தித்தனர். ஆனால் அவரோ எதற்கும் பணிய வில்லை. பின்பு அவர் கடலூர் கிளை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். மாற்றுஉடை இல்லாமல் பல நாட்கள் அவர் இருக்க வேண்டியிருந்தது அவரது சகோதரர்கள் கொண்டு வந்த துணிகளை சிறை அதிகாரிகள் தர மறுத்து விட்டனர். சிறைக்குள்ளும் போராட்டம் கிளைச் சிறையில் பெண் கைதி களுக்கு குளிக்க தனி இடம் கிடை யாது. சிறைக் கைதிகள், போலீஸ் காவ லர்கள், சிறை வார்டன்கள் எதிரில் தான் குளிக்க வேண்டும். தடுப்புச் சுவர் எதுவும் கிடையாது. பற்பொடியை உப யோகிக்க அனுமதிக்க மாட்டார்கள். இந்தக் கொடுமைகளை எதிர்த்தும், பெண் கைதிகளை முறையாக நடத்த க்கோரியும் ஷாஜாதி உண்ணாநிலை போராட்டத்தை துவங்கினார். 14ஆவது நாளில் மயங்கி விழுந்த அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். மருத்துவமனையிலேயும் உண்ணாநிலையை தொடர்ந்தார். அவர் அணிந்திருந்த புடவை ஜாக்கெட் கிழியத் தொடங்கியது. இதைச் கேள்விப்பட்ட கடலூர் மத்திய சிறையிலிருந்த தோழர்கள் எம்.ஆர். வெங்கட்ராமனும் ஏ.கே. கோபா லனும் சிறையில் இருந்த ஆந்திர தோழர்களுக்கு உதவுவதற்காக கடலூ ரில் தங்கியிருந்த ஆந்திர தோழர் ஒருவர் மூலம் துணிகளை அனுப்பி உதவினர். சிறைவாசிகளின் கோரிக்கை நிறைவேறியது உண்ணாநிலையின் 16ஆவது நாளில் அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது. கிளைச் சிறைச்சாலையில் பெண் கைதிகள் குளிக்க தனி குளியல் அறை கட்டித்தருமாறு நீதிபதி உத்தர விட்டார். அதன்பிறகே, ஷாஜாதி போராட்டத்தை முடித்தார். சிறைச் சாலையில் இருக்கும்பொழுது பெற்றோர், சகோதரர்கள், உறவினர் களின் நிர்ப்பந்தம் அதிகரிக்க தொடங்கியது. முஸ்லிம் பெண் சிறைச் சாலையில் இருப்பது குடும்பத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் என்றெல்லாம் உறவினர்கள் அவரிடம் கெஞ்சிப் பார்த்தனர். பிறப்பால் இஸ்லாமிய ரான ஷாஜாதி கம்யூனிஸ்ட்கட்சி வழி யிலேயே செல்வேன் என்று உறுதி யாகக் கூறிவிட்டார். ஷாஜாதி வேலூ ருக்கு மாற்றப்பட்ட பின்பு பெண்கள் சிறைச் சாலையிலும் அவரது செயல் பாடு தொடர்ந்தது. ஏற்கெனவே அங்கே காவலில் வைக்கப்பட்டிருந்த மணலூர் மணியம் மாள், ஆந்திராவைச் சேர்ந்த சூர்யா வதி, பத்மாவதி போன்ற தோழர்க ளுடன் சேர்ந்து சிறைக்குள்ளும் ஷாஜாதி சில போராட்டங்களை நடத்தி னார். அத்துடன் தண்டனை பெற்ற பெண் கைதிகளுக்கு ஆறுதல் சொல் வது, அவர்களது குழந்தைகளுக்கு முறையான உணவு கிடைக்கச் செய்வது. குளிக்கச் செய்து பரா மரிப்பது போன்ற சேவைகளிலும் கம்யூனிஸ்டு காவல் கைதிகள் ஈடு பட்டிருந்தனர். இந்தப் பணியிலும் ஷாஜாதி முழுஈடுபாட்டுடன் செயல் பட்டார். அப்போதைய சிறை அமைச்சர் மாதவமேனன் பெண்கள் சிறையை பார்வையிட வந்தபோது, ஷாஜாதி முன்னின்று தண்டனை பெற்ற பெண்களின் சிரமங்களை எடுத்துக் கூறினார். பெண் சிசுக்கள் அதிக எண்ணிக்கையில் மரணமடைவதை தடுத்திட மருத்துவ வசதியையும் குழந்தைகளுக்கு உணவும் ஏற்பாடு செய்யும்படி வற்புறுத்தி அதை நிறைவேற்றவும் செய்தார். இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆண்கள் சிறையிலிருந்த கோவிந்தராஜனுக்கும் மற்றவர்களுக்கும் அவ்வப்பொழுது கிடைத்து வந்தன. திருமண வாழ்க்கை ஷாஜாதியை அறிந்த காலம் முதலே அவர் குறித்தும் கம்யூனிச லட்சி யத்தில் அவர் கொண்டிருந்த ஈடு பாடு, எந்தச் சோதனையையும் துணி வாக சந்திக்கும் ஆற்றல், உறுதி போன்றவை கோவிந்தராஜனின் உள்ளத்தில் ஆழமாக பதிந்திருந்தன. தலைமறைவு வாழ்வின்போது அவர்கள் ஒருவரையொருவர் பரஸ் பரம் புரிந்து கொள்ளவும் முடிந்தது. திருமணம் செய்வதாக இருந்தால் ஷாஜாதியை மணந்து கொள்வது என்ற முடிவில் கோவிந்தராஜன் இருந்தார். ஷாஜாதியும் கோவிந்த ராஜனைக் குறித்து அத்தகையதொரு எண்ணத்தைக் கொண்டிருந்தார். அனுமதி மறுப்பு வேலூர் சிறையிலிருந்த முக்கியத் தோழர்களுக்கு இந்த விபரங்கள் தெரி யும். ஷாஜாதியை சந்திக்க விரும்பிய கோவிந்தராஜன் தோழர்களின் ஆலோ சனைப்படி அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். தானும் ஷாஜாதி யும் கணவன் - மனைவி என்றும், எனவே தன்னை பெண்கள் சிறைக்குச் சென்று அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டார். அரசாங் கம் முதலில் அதை ஏற்றுக் கொண்டு போலீஸ் காவலுடன் அவரை பெண்கள் சிறைக்கு அழைத்துச் சென்றது. ஷாஜாதியுடன் பேசி விட்டுத் திரும்பினார். ஆனால் மறுமுறை அனு மதி தர மறுத்துவிட்டது. மனம்மாறிய கொடூரமான அதிகாரி வேலூர் சிறை கண்காணிப்பாள ராக இருந்த மீனாட்சிசுந்தரம், கம்யூ னிஸ்ட் கைதிகள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தியவர். மிருகத்த னமான ஒடுக்குமுறைக்கு பெயர் பெற்ற வர். அவரது காட்டு தர்பார் கம்யூனிஸ்ட் களிடம் செல்லுபடி ஆகாது என்பதைக் கண்ட பின் அவர் கம்யூனிஸ்ட் கைதிக ளுடன் சுமூகமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். ஒருமுறை பெண்கள் சிறையிலுள்ள கம்யூனிஸ்ட் கைதி களை சந்திக்க வேண்டுமென்று ஆண்கள் சிறையிலுள்ள கம்யூனிஸ்ட் தோழர்கள் விரும்பினர். அதை ஏற்று மோகன் குமாரமங்கலம், கே.டி.கே. தங்கமணி, ஜி.கோவிந்தராஜன் ஆகி யோரை அரசாங்கத்தின் உத்தரவு இல்லாமலேயே தனது காரில் ஏற்றிக் கொண்டு பெண்கள் சிறைக்கு அழைத்துச் சென்று அவர்களை சந்திக்கச் செய்தார்.சிறையிலிருந்து விடுதலையானபின் ஷாஜாதியும் கோவிந்தராஜனும் திருமணம் செய்து கொண்டனர். தோழர் ஷாஜாதி நூற்றாண்டு விழா 2004 இல் தோழர் ஷாஜாதி அவர்கள் நினைவு மறதியால் பாதிக்கப்படும் வரை பெண்களின் உரிமைகளுக்காக, காவல் நிலைய மனித உரிமை மீறல் பிரச்சனைகளுக் காக நடைபெற்ற எண்ணற்ற போராட்ட ங்களின் மூலம் களப்பணியாற்றியவர். அத்தகு வீரமங்கையின் நூற்றாண்டு விழா நெல்லிக்குப்பத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. அவரது வழியில் தொடர்ந்து பயணிப்போம்.