states

img

பீகாரில் வாக்காளர் நீக்கம் 65.20 லட்சமாக உயர்வு

பீகாரில் வாக்காளர் நீக்கம் 65.20 லட்சமாக உயர்வு

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்துள்ள பாஜக, தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளை  அரங்கேற்றி வருகிறது. அதாவது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் ஜூலை 23 வரை 53 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களை நீக்கியிருந்தது. இந்நிலையில், அடுத்த 2 நாட்களில் மேலும் 12 லட்சம் வாக்காளர்ளை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இதன்மூலம் நீக்கம் செய்யப்பட்ட மொத்த வாக்கா ளர்களின் எண்ணிக்கை 65.20 லட்சமாக உயர்ந்துள்ளது. இறப்பு, நிரந்தர குடி யேற்றம், இரு இடங்களில் பதிவு ஆகிய வற்றால் வாக்குரிமை நீக்கம் செய்யப் பட்டுள்ளது என்றும், இன்னும் 1.20 லட்சம் வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட வில்லை என தேர்தல் ஆணையம் அறிக் கை மூலம் விளக்கம் அளித்துள்ளது.