states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தாய்லாந்து - கம்போடியா இடையே ராணுவ மோதல் அதிகரித்து வரும் நிலையில், தாய்லாந்தின் 7 மாகாணங்களுக்குச் செல்வதை தவிர்க்குமாறு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள அரசு இடைநிலைப் பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தில்லியில் நடந்த பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

25 ஆபாச இணைய தளங்களுக்கு தடை

நாட்டில் 25 இணையதள இணைப்புகளில் ஆபாச வீடியோ உள்ளிட்ட தவறான விளம்ப ரங்கள் இடம்பெற்றிருப்பதை ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கண்டுபிடித்துள்ளது. தற்போது அவற்றை தடை செய்து  நட வடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக தகவல் மற்றும் ஒளி பரப்பு அமைச்சகத்தின் சார்பில்  வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாட்டில் ஆபாச படம் மற்றும் பிற ஆபாச உள்ளடக்கங்களை கொண்ட ஓடிடி  தளங்கள், இணையதளங்கள், ஆபாச செயலிகள் என்று மொத்தம் 25 தளங் களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.  ஒன்றிய அரசின் அறிவிப்பின் மூலம் உல்லு, ஆல்ட், பிக் ஷாட்ஸ், டெசி பிளிக்ஸ், பூமெக்ஸ், நவரச லைட், குலா,  கங்கன் செயலி, புல், ஜால்வா செயலி, வாவ் என்டர்டெயின்மென்ட், லூக் என்டர் டெயின்மென்ட், ஷோஎக்ஸ் என 25 ஆபாச இணையதளங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.