திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ.67.14 கோடி சிறுபான்மையினர் நல நிதி வழங்க வேண்டும்
ஒன்றிய அமைச்சருக்கு ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., கடிதம்
திண்டுக்கல், ஜூலை 25- பிரதமர் ஜன் விகாஸ் கர்யாக்ரம் திட்டத்தின் (சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளில் சமூக பொருளா தார மேம்பாட்டிற்காக செயல்படுத்தப் படும் ஒன்றிய அரசின் திட்டம்) கீழ் திண்டுக்கல் மாவட்டத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை உடனடியாக வழங்குமாறு கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பி னர் ஆர்.சச்சிதானந்தம் ஒன்றிய சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் ஜார்ஜ் குரியன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக கடிதத்தில், “2023-24 ஆம் ஆண்டுக்கான ரூ.40.14 கோடியும், 2024-25 ஆம் ஆண்டுக்கான ரூ.27 கோடியும் என மொத்தம் ரூ.67.14 கோடி நிதி நிலுவையில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுபான்மை யினர் மக்கள்தொகை அதிக அளவில் வாழ்ந்து வருவதாகவும், அவர்களுக் கான கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் கிராமப்புறங் களில் செயல்பட்டு வெற்றிகரமான சேவையை வழங்கி வருகின்றன. 2023-24 ஆம் ஆண்டில் மாநில அளவிலான குழுவால் 51 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதற்கான மதிப்பீட்டுத் தொகையான ரூ.40.14 கோடி ஒன்றிய சிறுபான்மையினர் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு அமைச்சகத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறது. 2024-25 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு மாநில அளவிலான குழு ஒரே ஒரு திட்டத்தை மட்டுமே அனு மதித்துள்ளன. ரூ.27 கோடி மதிப்பீட்டுத் தொகை ஒன்றிய அரசி டம் அனுமதிக்காக அனுப்பப் பட்டுள்ளது. ஒன்றிய அரசு தமிழ்நாடு மாநில அளவிலான குழுவின் திட்டங் களுக்கு விரைவில் அனுமதி வழங்கி மக்கள் நலனுக்கான திட்டங்களை நிறை வேற்ற நிதி ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பி னர் ஆர்.சச்சிதானந்தம் தனது கடி தத்தில் வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அமைச்சரை வெள்ளியன்று நேரில் சந்தித்தும் இக்கோரிக்கைகளை வலி யுறுத்தினார்.