தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தரானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை சட்டவிரோதமானது, மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் இந்த நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
2020ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த மசோதா, 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் திருத்த மசோதா, 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் மசோதா, 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மசோதா, 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை திருத்தச் சட்ட மசோதா, 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் இரண்டாம் திருத்தச் சட்ட மசோதா, 2022ஆம் ஆண்டு தமிழ் பல்கலைக்கழக இரண்டாம் திருத்தச் சட்ட மசோதா, 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா ஆகிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல்கலைக்கழக சட்டத்திருத்தத்தின் படி, தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேந்தரானார்.