states

கன்னியாஸ்திரிகளை சந்திக்க அனுமதி மறுத்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

கன்னியாஸ்திரிகளை சந்திக்க அனுமதி மறுத்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

புதுதில்லி சத்தீஸ்கர் மாநிலத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கன்னியாஸ்திரிகளைச் சந்திக்க மாநில அரசு அனுமதி மறுத்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலை மைக்குழு செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி கைது செய்திருக்கும் கன்னியாஸ்திரிகளை சந்திப்ப தற்காக துர்க் சிறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கேரள காங்கிரஸ் (ம) கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சென்றபோது, கன்னியாஸ்திரி களை பார்ப்பதற்கு சிறை நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்திருக்கிறது. இதற்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு வெளிப்படைத்தன்மை, மக்களு க்குப் பதில்கூறும் பொறுப்பு மற்றும் தனிநபர் உரிமைகள் பறிப்பு முதலானவற்றை ஏற்க முடியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிருந்தா காரத், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே. ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ.ஏ. ரகிம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆனி ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சுனீர், கேரள காங்கிரஸ் (ம) சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஸ் கே.மணி முதலானவர்கள் இத்தூதுக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். அற்பமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சிறை யில் அடைக்கப்பட்டிருக்கும் கன்னியாஸ்திரி களைப் பார்ப்பதற்கு இவர்களுக்கு சிறை நிர்வா கம் அனுமதி மறுத்திருக்கிறது. முன்கூட்டியே எழுத்துப்பூர்வமாக அனுமதி கோரி விண்ணப்பி த்திருந்தபோதிலும் அதனை சிறை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. அரசியல் தலைவர்களையும், மக்கள் பிரதி நிதிகளையும் கைது செய்யப்பட்டிருக்கும் கன்னி யாஸ்திரிகளைப் பார்ப்பதற்கு அனுமதி மறுத்தி ருப்பதிலிருந்து மனித உரிமைகளை எந்த அள விற்கு மதிக்காமல் அரசு நடந்துகொண்டி ருக்கிறது என்பதையே காட்டுகிறது. இத்தகைய  நடவடிக்கைகள் ஜனநாயக நடைமுறைகளின் மீது நேரடி தாக்குதல்களாகும். இது மாநிலத்தி லும், ஒன்றியத்திலும் ஆண்டுகொண்டிருக்கும்  பாஜக தலைமையிலான அரசாங்கங்களின் எதேச்சதிகார குணத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கன்னியாஸ்திரிகளின் மீதான குற்றச்சாட்டு களுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. அவர்களு க்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை களை முற்றிலுமாக மீறி அவர்கள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். கன்னியாஸ்திரிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கும் செயல் தனித்த ஒன்று அல்ல. மதச்சுதந்திரத்தை அரித்து வீழ்த்திடும் மற்றும் சிறுபான்மை மதத்தினரை துன்புறுத்திடும் விரிவான நடைமுறையின் ஒரு பகுதியேயாகும். பஜ்ரங்தளம் அமைப்பின்  தூண்டுதலின்படி இவர்கள் கைது செய்யப் பட்டிருப்பது போன்று தோன்றுகிறது. நம் அர சமைப்புச்சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளபடி ஒருவர் எந்த மதத்தையும் சுதந்திரமாகவும், அமைதியாகவும் வழிபட உரிமை உண்டு என்பதை எப்பாடுபட்டேனும் பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.                             (ந.நி.)