ஆகஸ்ட் 1 முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% வரி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனாஸ்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு எதிராக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இந்தியாவின் மீது 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும், அத்துடன் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அவர் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து ராணுவ தளவாடங்களையும், எரிசக்தியையும் வாங்குகிறதை சுட்டிக்காட்டி, இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.