science

img

ககன்யான் சோதனை பணிகள் டிசம்பரில் தொடக்கம்!

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டமான ககன்யான் இன் சோதனை பணிகள், வரும் டிசம்பரில் தொடங்குவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

தில்லியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய இஸ்ரோ தலைவர் நாராயணன், ககன்யான் திட்டத்தில் 80 சதவீத சோதனைகளை முடித்துள்ளதாகவும், இதுவரை 7,700 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும், ககன்யான் பணி சிறப்பாக முன்னேறி வருவதாகவும் கூறினார். மீதமுள்ள 2,300 சோதனைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.

ககன்யான் திட்டத்தின் கீழ் முதல் முறையாக விண்கலத்தை விண்ணில் ஏவி நடத்தப்படும் சோதனை இந்த ஆண்டு டிசம்பர் மாதம், தொடங்க உள்ளதாகவும், இதில் அரை மனித உருவம் கொண்ட வ்யோமித்ரா என்ற ரோபோ பயணிக்க உள்ளது என தெரிவித்தார். மேலும், உயிர் ஆதரவு அமைப்புகள், விமானவியல், வழிசெலுத்தல் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் போன்ற முக்கியமான தொழில்நுட்பங்களை சரிபார்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.