உயிரி முறையில் புதிய பிளாஸ்டிக்
நவீன உலக வாழ்வில் பிளாஸ்டிக் அவசியமான ஒரு பொருளாக உள்ளது. ஆனால் அது சுற்றுசூழலை மாசுபடுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. பெட் பிளாஸ்டிக்குகளில் உள்ள டெர்தாலிக் அமில மானோமர் இயற்கை முறையில் அழியாத ஒன்று. அதற்கு மாற்றாக பிடிசிஏ (pyridinedicarboxylic acid, or PDCA) எனும் வேதிப்பொருளை கோப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள். பிடிசிஏ தயாரிப்பில் இரண்டு முக்கிய முன்னேற்றங்களை இந்த ஆய்வாளர்கள் செய்துள் ளார்கள். இப்போதுள்ள முறை களை விட இதில் ஏழு மடங்கு அதி கம் கிடைக்கிறது. மேலும் துணைப் பொருளாக உண்டா கும் நச்சுகளையும் குறைத் துள்ளார்கள். செல்களில் நடை பெறும் வளர்சிதை மாற்றங்க ளைக் கொண்டு நைட்ரஜனை உள்வாங்கி இந்த பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பேக்டீரியாவிற்கு (Escherichia coli) குளூக் கோஸ் ஊட்டப்படுகிறது. அவற் றிற்குள் செலுத்தப்பட்ட அதிக என்சைம் மூலம் இறுதிப் பொருள் உண்டாக்கப்படுகிறது. இந்த முறையிலும் நச்சுப் பொருட்கள் உண்டாகின்றன. பேக்டீரியாவை வளர்க்கும் முறையை துல்லியமாக்குவதன் மூலம் அவை சரி செய்யப்படு கின்றன என்கிறார் உயிரி பொறி யாளர் டனாக்கா சூடோமோ. வணிக அளவில் உயர்த்தப்படு வதற்கு இன்னும் ஆய்வுகள் செய்ய வேண்டி உள்ளதாம். இந்த ஆய்வு மெட்டபாலிக் என்ஜினியரிங்(Metabolic Engineering)எனும் இதழில் வந்துள்ளதாக சயின்ஸ் அலர்ட் கூறுகிறது.
தேநீர் அருந்துவது எலும்புக்கு நல்லது
ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண் களுக்கு எலும்பு தேய்மானம் (Osteoporosis) என்பது சாதாரண மாக வரக்கூடியது. மூன்றில் ஒரு வருக்கு இது வரலாம். எலும்பு தேய்ந்து போகும்போது உடலானது புதிய எலும்புகளைக் கொண்டு அதை மாற்ற முடியாதபோது இது ஏற்படுகிறது. எலும்புகள் நொறுங்குகின்ற தன்மை யை அடைகின்றன. எனவே கீழே விழுந்தால் எலும்பு முறிவு ஏற்படும்.அது குணமாவதற்கு அதிக காலமா கும். மாத விலக்கு நின்றபின் எலும்பின் வளர்சிதை மாற்றத்திற்கு உறுதுணை யாக இருக்கும் ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன் சுரப்பது குறைந்து விடு கிறது. சினை முட்டைகளை உரு வாக்கும் ஓவரி எனும் உறுப்பை நீக்கும் போதும் இந்த விளைவு ஏற்படும். எலும்பு தேய்மானத்திற்கும் காப்பி, தேநீர் அருந்துவதற்கும் தொடர்பு உண்டா என்று அறிவதற்காக ஆஸ்தி ரேலியாவின் பிளிண்டர்ஸ் பல்க லைக்கழகத்தை சேர்ந்த பொது சுகா தார ஆய்வாளர்கள் 65 வயதுக்கு மேற்பட்ட 9700 அமெரிக்க பெண்களின் காப்பி, தேநீர் குடிக்கும் பழக்கத்தை ஆய்வு செய்தனர். பத்து வருட கால இடைவெளியில் நான்கு முறை இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்தப் பெண்களின் எலும்பு ஆரோக்கியம் குறித்தும் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இடுப்பிலும் தொடை எலும்பு இடுப்பில் சேருமிடத்திலும் எலும்பு அடர்த்தி (bone mineral density (BMD)அளவிடப்பட்டது. தேநீர் அருந்தாதவர்களைவிட வழக்கமாக தேநீர் குடிப்பவர்களின் இடுப்பு எலும்பு அடர்த்தி கணிசமாக அதிகரித்து காணப்பட்டது. இதற்கு நம் எலும்புகளின் வளர்ச்சிக்கு காரண மான செல்களை ஊக்குவிக்கும் கேட்சின்ஸ் எனும் கூட்டுப்பொருள் டீயில் இருப்பது காரணமாக இருக்க லாம். உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கும் தேநீர் நன்மை பயக்கிறதாம். ஒரு நாளைக்கு ஐந்து கப்பிற்கு மேல் காப்பி அருந்து பவர்களின் பிஎம்டி குறைந்து காணப் பட்டது.கால்சியம் உள்வாங்குவதில் காப்பியிலுள்ள கபய்ன் எதிர்மறை யாகச் செயல்படுவது இதற்கு காரண மாக இருக்கலாம். இந்த ஆய்வு பெரும்பாலும் வெள்ளை இனப் பெண்களிடம் நடத்தப்பட்டதால் இது எல்லோ ருக்கும் பொருந்தும் என்று கூற முடி யாது. காப்பி குடிப்பதை நிறுத்த வேண்டுமென்றோ அல்லது டீயை அதிகம் குடிக்க வேண்டும் என்றோ பொருள் கிடையாது. ஆனால் மித மான அளவில் டீ குடிப்பது எலும்பிற்கு நல்லது. அதிகம் காப்பி குடிப்பது நல்ல தல்ல; குறிப்பாக மது அருந்தும் பெண் களுக்கு’ என்கிறார் பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நோய் இயலாளர் என்வு லு. இந்த ஆய்வு நியூட்ரியன்ட்ஸ் (Nutrients)எனும் இதழில் வந்துள்ளதாக சயின்ஸ் அலர்ட் கூறுகிறது.
நிலவு துருப்பிடிப்பதற்கு பூமி காரணமா?
இரும்பு உலோகம் ஆக்சிஜனுடன் வினை புரிந்து இரும்பு ஆக்சைடுகள் உண்டா கின்றன. இதை நாம் துருப்பிடித்தல் என்கிறோம். நிலவில் இத்தகைய ஆக்சைடு கள் காணப்படுவது அறிவியலாளரை ஆச்ச ரியப்படுத்தியுள்ளது. ஏனெனில் நிலவில் வளி மண்டலம் இல்லை; ஒரு மெல்லிய எக்ஸோபியர் (exosphere) மட்டுமே உள் ளது. அதிலும் ஆக்சிஜன் இல்லை. மேலும் சூரியக் காற்று நிலவில் மோதும்போது ஹைடிரஜன் அணுக்கள் அதன் மீது மோது கின்றன. இது ஆக்சிடேஷனை தடுத்து விடும். இது குறித்து சீனாவின் மக்காவ் பல்க லைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி அறிவி யலாளர் சியாண்டி செங் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். ஒரு விளக்கம் கீழ்க்கண்டவாறு கொடுக் கப்படுகிறது. சூரியக் காற்று பூமியில் மோதும்போது அதன் காந்தப்புலம் (magnetosphere) பூமிக்கு பின்புறமாக சூரியனுக்கு எதிர் திசையில் தள்ளப்படு கிறது. இதில் பூமியின் வளிமண்டலத்திலி ருந்து கசியும் ஆக்சிஜன் அயனிகளும் கலந்திருக்கின்றன. முழுநிலவு நாளன்று, நிலவு பூமியின் காந்த வளையத்தின் வழி யாக செல்லும்போது ஆக்சிஜன் அயனிகள் அதன் மீது மோதுகின்றன. இதை சோதனைச் சாலையில் பரி சோதிப்பதற்காக நிலவில் காணப்படுவது போன்ற இரும்பு தாதுக்களின் மீது ஆக்சி ஜன் அயனிகளை ஆய்வாளர்கள் செலுத்தி னர். இதில் ஆக்சிஜன் அயனிகள் உலோக இரும்பை ஆக்சிடைஸ் செய்கின்றன என்று தெரிந்தது. சூரியக் காற்று இந்த வினையை மாற்றிவிடுமா என்று காண, பல்வேறு ஆற்றல் நிலையில் ஹைடிரஜன் அயனி கற்றை களை ஹேமடைட்(இரும்பு ஆக்சைட்) மீது செலுத்தினர். பூமியின் காற்றை ஒத்த அதிக ஆற்றல் கொண்ட கற்றைகள் ஆக்சிஜன் வினையை மாற்றியது. ஆனால் சூரியக் காற்றை ஒத்த குறைந்த ஆற்றல் கொண்ட கற்றைகள் மாற்றவில்லை. பூமியிலிருந்து வீசும் ஆக்சிஜன் காற்றினால் நிலவில் துருப்பிடிக்கும் இரும்பை சூரியக் காற்றி னால் மாற்ற இயலாது என்று இது காட்டு கிறது. இதை தொடர்ந்து பல விஷயங்கள் ஆரா யப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக 2.4மில்லியன் வருடங்களுக்கு முன் பூமியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் உண்டான பெரும் ஆக்சிஜனேற்ற நிகழ்வு (Great Oxidation Event) குறித்த பதிவுகள் நிலவின் இரும்பு ஆக்சைடில் கிடைக்க லாம். அண்மையில் நிலவின் 69 டிகிரி தெற்கில் வெற்றிகரமாக இறங்கிய சந்திர யான்3 உம் நிலவின் தென் துருவத்தில் இறங்கப்போகும் சீனாவின் சாங் இ -7உம் பூமிக்கும் நிலவுக்கும் இடையே பின்னிப் பிணைந்துள்ள வரலாற்றை ஆழமாக அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பாகும். இந்த ஆய்வு ஜியோபிஸிக்கல் ரிசர்ச்லெட்டர்ஸ் (Geophysical Research Letters)என்கிற இதழில் வந்துள்ளதாக சயின்ஸ் அலர்ட் தெரிவிக்கிறது.
