states

img

பீகார் அரசியலில் திடீர் திருப்பம் - மாநிலங்களவை இடத்திற்காக வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர் நிதிஷ் குமார்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மாநிலங்களவை இடத்திற்காக வேட்புமனு தாக்கல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில், கடந்த 2025-ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, நிதீஷ் குமார் 10-ஆவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த சூழலில், பதவியேற்று மூன்றே மாதத்தில் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்த சூழலில், நிதிஷ் குமார் தனது எக்ஸ் பதிவில், "இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, நீங்கள் தொடர்ந்து என் மீது நம்பிக்கை வைத்து, ஆதரவு தந்துவந்துள்ளீர்கள். மேலும் அந்த நம்பிக்கையின் பலத்தில்தான் நாங்கள் பீகாருக்கும் உங்கள் அனைவருக்கும் முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகிறோம்.
உங்கள் நம்பிக்கை மற்றும் ஆதரவின் சக்திதான் இன்று பீகார் வளர்ச்சி மற்றும் கண்ணியத்தின் புதிய பரிமாணத்தை வழங்க உதவியது. இதற்காக, நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடக்கத்தில் இருந்தே சட்டமன்ற, நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக வேண்டும் என விரும்பினேன்;  எனவே இந்த முறை மாநிலங்களவை உறுப்பினராக விரும்புகிறேன். பீகார் அமைய இருக்கும் புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்" என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம் அவர் முதல்வர் தனது பதவியை விரைவில் ராஜினாமா செய்ய இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.
இதை தொடர்ந்து, பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார் இன்று மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.  பீகாரின் அடுத்த முதல்வராக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்பார் என்று செய்தி வெளியாகி வருகின்றன.