court

img

தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லியில் தெருநாய்களைக் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை மாற்றி 3 நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெருநாய்களைக் காப்பகங்களில் அடைக்க வேண்டுமென்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
தெரு நாய்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் பொருந்தக் கூடிய ஒட்டுமொத்த வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தப்படும். இது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க வேண்டும் எனவும், அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் உள்ள தெரு நாய் விவகார வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை ஊசி மற்றும் உரியத் தடுப்பூசிகள் செலுத்தி மீண்டும் தெருவிலேயே விடலாம்
ஆக்ரோஷமான, ரேபிஸ் போன்ற நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நாய்களை மீண்டும் தெருவில் விடாமல் காப்பகத்தில் தனியாக அடைத்து வைக்க வேண்டும்.
தெருக்களில் நாய்களுக்கு உணவளிக்கத் தனி இடத்தை ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் உணவளிக்கக் கூடாது. போன்ற வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளனர்.