பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் போராட்டத்திற்கு ஆதரவாக, அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெ. ராஜா, மாவட்ட தலைவர் பரிதிமால் கலைஞன், சாலை பணியாளர் சங்க நிர்வாகி மகாதேவன், மாவட்டத் தலைவர் மாவட்ட துணைத் தலைவர் ரகுபதி, நிர்வாகி புனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
