court

img

சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பெயர் பரிந்துரை!

சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்எம் ஸ்ரீவஸ்தவா, வரும் மார்ச் 5-ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. குடியரசு தலைவரின் ஒப்புதலை தொடர்ந்து, அவர் மார்ச் 6 ஆம் தேதி பொறுப்பேற்பார். 
நீதிபதி தர்மாதிகாரி, கடந்த 1992 ஆம் ஆண்டு ஜபல்பூரில் உள்ள மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 2000 மற்றும் 2015 க்கு இடையில் ஒன்றிய அரசின் நிலையான ஆலோசகராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில், வருமான வரித்துறை, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பிஎஸ்என்எல் உள்ளிட்ட பல நிறுவனங்களில் ஆலோசகராக பணியாற்றினார். ஏப்ரல் 2016 இல், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மார்ச் 2018 இல் நிரந்தர நீதிபதியானார். ஏப்ரல் 2025 இல், அவர் கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.