court

img

இந்தியாவில் முதல் முறையாக கருணைக் கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

முதல் முறையாக கருணைக்கொலை உச்சநீதிமன்றம் அனுமதி

நாட்டிலேயே முதல் முறையாக கருணைக்கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  கடந்த 2013 ஆம் ஆண்டு உத்தரப் பிர தேச மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா, கல்லூரியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழு ந்த அதன் பிறகு சுய நினைவின்றி படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.  அவரது தந்தை அசோக் ராணா, தனது மகனின் துன்பத்தைப் பார்க்க முடியா மலும், சிகிச்சைக்குத் தேவையான நிதி  வசதி இல்லாததாலும், மகனைத் தானாக மரணிக்க அனுமதிக்க வேண்டும் (Passive Euthanasia) என்று நீதி மன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கள் ஜே.பி. பர்திவாலா, கே.வி. விஸ்வநா தன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தில்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை வழங்கிய மருத்துவ அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது. அந்த அறிக்கையில், ஹரிஷ் ராணாவின் உடல்  முழுவதும் படுக்கைப் புண்கள் (bed sores) அதிகமாக இருப்பதாகவும், அவர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவ தற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்ப தையும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள் ளனர். இந்த வழக்கு புதனன்று நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வி.விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த அறிக்கை மிகவும் மனவேதனையை அளிக்கிறது.அந்த இளைஞரை இதே நிலையில் தொடர்ந்து இருக்க விடுவது மனிதாபிமானமற்றது என்று வேதனை தெரிவித்த  நீதிபதிகள் அமர்வு ஹரிஷ் ராணாவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வந்து எய்ம்ஸ் டாக்டர்கள் முறை யான வழிமுறைகளை பின்பற்றி அவருக்கு உயிர் நீக்க சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.    அதுமட்டுமின்றி கருணைக் கொலை தொடர்பான சட்டம் இயற்ற ஒன்றிய அரசு க்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.