states

img

தென்னிந்திய மாநிலங்கள் 66 ; வடமாநிலங்கள் 200 மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்துவது போல ஏமாற்று வேலை

தென்னிந்திய மாநிலங்கள் 66 ; வடமாநிலங்கள் 200 மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்துவது போல ஏமாற்று வேலை

புதுதில்லி பெண்களுக்கு 3இல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு கொ டுப்பதற்காக நாடாளு மன்றத்தில் மக்களவை உறுப்பி னர்களின் எண்ணிக்கையை 816 ஆக அதிகரிக்க ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக நாடாளுமன்றத்தில் விரைவில் 2 புதிய மசோதாக்கள் கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50% வரை உயர்த்துவதற்கான சட்ட மசோ தாவை மோடி அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையும் 50% அதிகரிக்கப்படும் என்று முன் மொழியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த புதிய மசோதாவிற்கு ‘இந்தி யா’ கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், “அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50% இடங்களை அதி கரிப்பது சமமானது என்ற மோடி  அரசின் வாதம் ஏமாற்று வேலை யாகும். தற்போதைக்கு விகிதாச்சா ரத்தில் மாற்றம் தெரியாமல் இருக்க லாம்.  ஆனால் இதன் ஆழமான விளைவுகளைப் புறந்தள்ளிவிட முடியாது. மக்களவையில் தற்போது மாநிலங்களுக்கு இடை யே இருக்கும் இடங்களின் இடை வெளியை அதிகரிப்பது, தென்னிந் திய மாநிலங்களுக்குப் பின்னடை வை ஏற்படுத்தும். உதாரணமாக, தற்போது உத்தரப்பிரதேசத்தில் 80 இடங்களும், தமிழ்நாட்டில் 39 இடங்களும் உள்ளன. முன்மொ ழியப்பட்ட மசோதாவின்படி, உத்த ரப்பிரதேசத்தின் பலம் 120ஆக  உயரும், அதேசமயம் தமிழ்நாட் டின் பலம் அதிகபட்சமாக 59ஆக மட்டுமே உயரும். இதேபோல், கேரளம் 20 இடங்களிலிருந்து 30ஆக உயரும் போது, பீகார் 40 லிருந்து 60 இடங்களாக மாறும். ஒட்டுமொத்தமாக, தென்னிந்திய மாநிலங்கள் 66 இடங்களை மட்டுமே பெறுகின்றன. ஆனால் வடமாநிலங்கள் 200 இடங்களைப் பெறுகின்றன. தெற்கு, வடகிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள சிறிய மாநிலங்களுக்குப் பாதகமாக அமையும் இத்தகைய சட்டத்தை மோடி ஒருதலைப்பட்சமாகத் தயா ரித்து வருகிறார். இதுகுறித்து தெலுங்கானா முதலமைச்சர் ஏற்கெ னவே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த முன்மொழிவு அதிகா ரப்பூர்வமாகப் பொதுவெளியில் வரும்போது மற்றவர்களும் இதைப் பின்தொடரக்கூடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். சு.வெங்கடேசன் அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஜெய்ராம் ரமேஷின் டுவிட்டர் எக்ஸ் பதிவை பகிர்ந்து,”ஜெய்ராம் ரமேஷ் முன் வைக்கும் இந்தக் கருத்துக் கள் நம் தேசத்தின் பன்முகத்தன்மை யையும், சரிநிகர் சாரம் கொண்ட மாநில அலகுகளை நிலைமாற்றம் செய்யும் பாஜகவின் நுட்பமான நடவடிக்கையைப் பற்றியதுமா கும். இந்த எச்சரிக்கையை நான் வழி மொழிகிறேன்” என அவர் கூறி யுள்ளார்.