states

img

தணிக்கை என்ற பெயரில் பிரச்சார உரையை நீக்கிய பிரச்சார் பாரதி தேர்தல் கால ஒளிபரப்பை புறக்கணிக்கப் போவதாக சிபிஎம் அறிவிப்பு

தணிக்கை என்ற பெயரில் பிரச்சார உரையை நீக்கிய பிரச்சார் பாரதி தேர்தல் கால ஒளிபரப்பை புறக்கணிக்கப் போவதாக சிபிஎம் அறிவிப்பு

கவுகாத்தி அசாம் மாநிலத்திலுள்ள ஆகாஷ்வாணி (வானொலி) மற்றும் தூர்தர்ஷன் மூலம் ஒளிபரப்பப்பட வேண்டிய கட்சியின் தேர்தல் கால சிறப்பு உரையைப் புறக்கணிக்கப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் அசாம் மாநி லக்குழு செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக் கையில்,“கடந்த மார்ச் 29 அன்று கவுகாத்தி ஆகாஷ்வாணி மற்றும் தூர்தர்ஷன் நிலையங்க ளுக்கு சிபிஎம் கட்சியின் தேர்தல் உரை வீடி யோ மற்றும் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப் பட்டது. அந்த உரை இந்திய தேர்தல் ஆணை யத்தின் அனைத்து விதிமுறைகளையும் பின் பற்றியே எழுதப்பட்டிருந்தது. உரையில் எந்த  வெளிநாட்டையும் விமர்சிக்கவில்லை ; குடி யரசுத் தலைவர் அல்லது நீதிமன்றம் குறித்து அவதூறான கருத்துக்கள் இல்லை ; எந்த ஒரு சமூகத்திற்கும் எதிராகவோ அல்லது வன்முறையைத் தூண்டும் விதமாகவோ வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை ; நாகரீகமற்ற சொற்கள் தவிர்க்கப்பட்டிருந்தன. முக்கிய பொருள் சிதைப்பு  கட்சியின் 10 நிமிட உரையில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் ; கார்ப்பரேட் மற்றும் மதவாத சக்தி களின் கூட்டணி குறித்த விமர்சனங்கள் ; அசாம் மாநில பாஜக அரசின் நிர்வாகத் தோல்வி கள் மற்றும் மக்களின் அடிப்படைப் பிரச்சனை கள் இருந்தன. ஆனால், தணிக்கை என்ற பெய ரில் சில வார்த்தைகளை மட்டும் நீக்காமல், உரை யின் முக்கியப் பொருளையே சிதைக்கும் வகை யில் பல முழுமையான வாக்கியங்கள் மற்றும் பத்திகளை அதிகாரிகள் நீக்கியுள்ளனர். இது வாக்காளர்களுக்கு கட்சி சொல்ல விரும்பிய செய்தியை முழுமையாக மாற்றிய மைத்துவிட்டது.  பிரச்சார் பாரதி அமைப்பின் கீழ் செயல் படும் தணிக்கை குழுவினர், கட்சியின் தேர்தல்  உரையில் மேற்கொண்ட மாற்றங்கள் ஜனநாயக விரோதமானவை. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பொது ஊடகங்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க நினைப்பதன் வெளிப்பாடே இது. ஒரு அரசியல் கட்சி தனது  கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வ தை தணிக்கை என்ற பெயரில் தடுப்பதுகருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் செயல். தேர்தலின் போது இத்தகைய போக்கு நிலவுவது ஆரோக்கிய மான ஜனநாயகத்திற்கு எதிரானது ஆகும். இது குறித்து அசாம் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகளுடன் இனி உரையை ஒளிபரப்ப முடியாது என்பதால், அதை முழு மையாகப் புறக்கணிக்கிறோம். இது ஒரு கொள்கை ரீதியான முடிவு. பேச்சுச் சுதந்தி ரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் தற்போது மிகவும் அதிகரித்துள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.