states

img

சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவாக திரைக்கலைஞர் நிகிலா விமல் பிரச்சாரம்

சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவாக திரைக்கலைஞர் நிகிலா விமல் பிரச்சாரம்

கண்ணூர் 140 தொகுதிகளைக் கொண்ட கேர ளத்தில் ஏப்., 9 அன்று சட்ட மன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) வேட்பாளர்கள், ஊழியர்கள் எளிய மக்கள் சந்திப்பு மூலமாக பிரச்சாரம் மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கண்ணூர் மாவட்டம் தளிபரம்பா தொகுதி எல்டிஎப் வேட்பாளர் பி.கே.ஷியாமளாவிற்கு  (சிபிஎம்) ஆதர வாக திரைக்கலைஞர் நிகிலா விமல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சா ரத்தின் போது பி.கே.ஷியாமளாவை கட்டி யணைத்து, நிகிலா விமல் வாழ்த்து தெரி வித்து, மக்களிடம் வாக்கு சேகரித்தார். நிகிலா விமல் தமிழில் வெற்றிவேல், கிடாரி, போர்த்தொழில், வாழை உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். மலை யாளத்திலும் இவர் நடித்த படங்கள் கொண்டாடப்பட்டுள்ளன. முன்னதாக, கடந்த 2024ஆம் ஆண்டு வயநாடு நிலச்சரிவின் போது சிபிஎம் மற்றும் வாலிபர் சங்கத்தினருடன்  திரைக்கலைஞர் நிகிலா விமல் நிவாரணப் பணிகளில் ஈடு பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.