வாக்குகள் நீக்கம் மேற்கு வங்கத்தில் வன்முறை
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள கலி யாச்சக் பகுதியில் நூற்றுக் கணக்கான வாக்குகள் எஸ்ஐஆர் (வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்) மூலம் நீக்கப்பட்டுள்ளன. இதனைக் கண்டித்து கலியாச்சக் பகுதி மக்கள் புதனன்று மாலை அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 3 பெண் அதிகாரிகள் உள்பட மொத்தம் 7 அதிகாரிகள் (அனைவரும் நீதித்துறை சார்பில் நியமிக்கப்பட்டவர்கள்) அலுவ லகத்திலேயே சிக்கிக் கொண்டனர். நள்ளி ரவு வரை அதிகாரிகள் அலுவலகத்தை விட்டு வெளியே வர முடியவில்லை. பிறகு வியாழனன்று அதிகாலை 2 மணி யளவில் காவல்துறையினர், துணை ராணுவத்தினர் வந்து கூடியிருந்த போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைத்துவிட்டு அதிகாரிகளை மீட்டனர். ஆனால் அதிகாரிகள் மீட்கப்பட்டபோது அவர்களின் வாகனங்கள் மீது போராட் டக்காரர்கள் கற்களை எறிந்து தாக்கு தல் நடத்தியதால், அங்கு பதற்றமான சூழல் உருவானது. மால்டாவில் நடந்த சம்பவம் குறித்து மாநில தேர்தல் அலுவலர் அறிக்கை சமர்ப்பிக்கவும் இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
