states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பிரசாத்

கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு செய்துள்ள  வளர்ச்சிப் பணிகள், குறிப்பாக பினராயி விஜயன் அவர்களின் தலைமை மிகவும் சிறப்பாக உள்ளது. அதனால் எல்டிஎப் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். 

திரிணாமுல் எம்.பி., மஹுவா மொய்த்ரா

மேற்கு வங்கத்தில் இன்று 2,500 சிஏபிஎப் கம்பெனிகள் உள்ளன. அதாவது 2.5 லட்சம் வீரர்கள் களத்தில் உள்ளனர். இவ்வளவு பெரிய படையை 2 மாதங்களுக்கு முன்பே ஐபிஎஸ் அதிகாரி ஷலப் மாத்தூர் என்பவர் கட்டுப்படுத்துகிறார். சட்டம் அமலாவதற்கு முன்பே மத்தியப் படைகளை ஐபிஎஸ் அதிகாரி எப்படி கட்டுப்படுத்துகிறார்?

காங்கிரஸ் எம்.பி., ரேணுகா சவுத்ரி

ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக அமராவதி இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது வெறும் அரசாங்கத்தின் முடிவு மட்டுமல்ல, இதற்காக இரவும் பகலும் போராடிய விவசாயிகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

தேசியவாத காங்கிரஸ் (சரத்) எம்.பி., பவுசியா கான்

எல்ஐசி உட்பட அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களும் பிரீமியம் செலுத்துவதற்கு வெறும் 30 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்குகின்றன. நெருக்கடி காலங்களில் திடீர் வேலை இழப்பு, மருத்துவ அவசரநிலை காரணமாக பிரீமியம் செலுத்தத் தவறினால் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து முறையாகப் பணம் செலுத்தி பராமரிக்கப்பட்டு வந்த ஒரு பாலிசி முழுமையாக ரத்தாகிவிடுகிறது. இதற்கு மாற்று ஏற்பாடு வேண்டும்.