states

img

செஸ் வரி நிதி மாற்றத்தில் ரூ.3.69 லட்சம் கோடி பற்றாக்குறை

செஸ் வரி நிதி மாற்றத்தில் ரூ.3.69 லட்சம் கோடி பற்றாக்குறை

ஒன்றிய அரசு வசூலித்த செஸ் வரி நிதியை உரிய கணக்குக ளுக்கு மாற்றியதில் ஏற்பட்டுள்ள  மிகப்பெரிய பற்றாக்குறை குறித்து, இந்தி யக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் (சிஏஜி) அறிக்கை யை மேற்கோள் காட்டி ‘இந்தியா’ கூட்ட ணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய ஜனதாதளம் எம்.பி., ஏ.டி. சிங் மாநி லங்களவையில் குரல் எழுப்பினார். இதுகுறித்து அவர் மேலும் பேசு கையில்,“2023-24 நிதியாண்டு வரை, வசூலிக்கப்பட்ட செஸ் வரியில் சுமார் ரூ.3.69 லட்சம் கோடி நிதி, அதற்கென ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நிதியங்களுக்கு மாற்றப்படவில்லை என்று சிஏஜி கண்டு பிடித்துள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வி  துறைகளில் ரூ.37,537 கோடியும், தேசிய நெடுஞ்சாலைகள் பணமாக்கல் பிரிவில் ரூ.5,968.1 கோடியும், முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி பிரிவில் ரூ.2,505.5 கோடியும் பற்றாக்குறை உள்ளன. நிதி அமைச்சகம் 2018-19  முதல் 2023-24 வரை ரூ.3.66 லட்சம் கோடி  மாற்றப்பட்டதாகக் கூறுகிறது. ஆனால், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கணக்கு களில் ரூ.2.65 லட்சம் கோடி மட்டுமே பதி வாகியுள்ளது. அப்படியென்றால் ரூ.1.01 லட்சம் கோடி இடைவெளி ஏன்? பொது மக்களிடம் குறிப்பிட்ட நோக்கத்திற்காக வசூலிக்கப்படும் செஸ் வரி, அந்த நோக் கத்திற்காகப் பயன்படுத்தப்படாமல் இருப்பது வெளிப்படைத்தன்மையைக் குறைக்கிறது. இந்த நிதிகள் ஏன் மாற்றப் படவில்லை மற்றும் எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?” என ஏ.டி.சிங் கேள்வி எழுப்பினார்.