வெளிநாட்டுப் பங்களிப்பு சட்ட மசோதா காலனிய காலத்து சட்டத்தைவிடக் கொடியது சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்
மதுரை இந்தியாவில் உள்ள தனிநபர், தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், சங்கங் கள் ஆகியவை வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதிக்கு முறையான வழிகாட்டுதல்கள் வழங்கும் சட்டமே ‘வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் 2010’ ஆகும். இந்தச் சட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதே போல இந்த சட்டத்தில் 2016, 2018, 2020 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை திருத்தம்மேற்கொள்ளப்பட்டது. தற்போது 4ஆவது முறையாக திருத்தம்மேற்கொண்டு, ஒரு புதிய சட்டத்திருத்த மசோதாவை மார்ச் 25ஆம் தேதி மக்களவையில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி யது. வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியை சில அமைப்புகள் தவறாகப் பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படை யில் இந்த சட்டத்தில் திருத்தத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த வெளி நாட்டுப் பங்களிப்பு (ஒழுங்கு முறை) சட்ட மசோதா காலனிய காலத்து சட்டத்தைவிடக் கொடி யது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகை யில்,“வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) உரிமம் சார்ந்த புதிய சட்ட மசோதா நிர்வாகக் குறைபாடுகளுக்காக சொத்துக் களைப் பறிமுதல் செய்யும்மிக மோசமான விதிகளைக் கொண்டது. இது காலனிய காலத்து சட்டத்தை விடக் கொடியது. கல்வி மற்றும் மருத்து வம் சார்ந்த கிறிஸ்துவ அமைப்புக ளின் சேவை நிறுவனங்களை குறு கிய அரசியல் கண்ணோட்டத் தோடு சீர்குலைக்கும் பாஜக வின் அப்பட்டமான முயற்சி. எங்களின் கடும் எதிர்ப்பினால் மசோதாவை தாக்கல் செய்யாமல் தற்காலிகமாக நிறுத்தியுள்ள னர். தொடரும் ஆபத்தை எதிர்த்து தொடர்ந்து போராடு வோம்” என உறுதியளித்துள்ளார்.
