இந்து, சீக்கியம் மற்றும் பெளத்தம் மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பட்டியல் சாதி(SC) பிரிவின் கீழ் வருவார்கள் என உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்து, சீக்கியம் மற்றும் பெளத்தம் ஆகிய மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பட்டியல் சாதி(SC) பிரிவின் கீழ் வருவார்கள் எனவும், கிறிஸ்துவம் உள்ளிட்ட பிற மதங்களுக்கு மாறியவர்கள் பட்டியல் சாதி பிரிவின் கீழ் வரமாட்டார்கள் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த பாதிரியார் சிந்தடா ஆனந்த் என்பவர் அக்காலா, ராமிரெட்டி உள்ளிட்டோரால் சாதி அவமதிப்பு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி, SC/ST சட்டத்தின் கீழ் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனை எதிர்த்து ராமிரெட்டி, ஆந்திரபிரதேச உயர்நீதிமன்றத்தை அணுகி வழக்கை ரத்து செய்ய கோரினார். நீதிபதி ஹரிநாத், ஆனந்த் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் பட்டியல் சாதி பிரிவின் கீழ் வரமாட்டார் எனக் கூறி, FIR-ஐ ரத்து செய்தார்.
மேலும், SC சான்றிதழ் வைத்திருப்பது மட்டும் போதாது; கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் அது செல்லாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஆனந்த் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் இந்து, சீக்கியம் மற்றும் பெளத்தம் ஆகிய மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பட்டியல் சாதி(SC) பிரிவின் கீழ் வருவார்கள் எனவும் தீர்ப்பளித்துள்ளது.
