states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் அசாம் மாநிலச் செயலாளர் சுப்ரகாஷ் தாலுக்தார்

சிபிஎம் ஆளும் கேரளாவில், ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள சுமார் 62 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் வழங்குவதில் எந்தவிதமான அரசியல் பாகுபாடும் இல்லை. அவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், தகுதியுள்ள அனைத்துப் பெண்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்கிறது. ஆனால் பாஜக ஆளும் அசாமில் பாகுபாடு உள்ளது.

பிஜேடி எம்.பி., சஸ்மித் பத்ரா

பாஜகவினர் ஒடிசாவின் பெருமை பற்றி அதிகம் பேசுகிறார்கள். ஆனால் முன்னாள் முதலமைச்சர் பிஜூ பட்நாயக் எதிராக தரம் தாழ்ந்த, பொய்யான கதைகளைக் கூறுகிறார்கள். இதுதான் அவர்களின் உண்மையான முகமா? பாஜக தலைவர்களை பற்றி அவதூறாக பேசினால் அவர்கள் பொறுப்பார்களா? நாங்கள் அப்படிப்பட்ட அரசியல் செய்யவில்லை.

​​​​​​திரிணாமுல் எம்.பி., குணால் கோஷ்

மேற்கு வங்கத்தில் சுதந்திரமான, நடுநிலையான தேர்தல் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் யாரும் உண்மையான நடுநிலையாளர்கள் கிடையாது. மாற்றப்பட்ட அனைத்து அதிகாரிகளும் பாஜகவிற்கு தொடர்புடையவர்கள்.

பத்திரிகையாளர் ராணா அய்யூப்

லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், 2 செய்தியாளர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த உலகம் இஸ்ரேலின் செயலை, இதுவும் ஒரு படுகொலை என்று அழைப்பதற்கு, எத்தனை செய்தியாளர்கள் கொல்லப்பட வேண்டும்?