லெபனானில் பத்திரிகையாளர்களைக் கொன்ற இஸ்ரேல் ஈரான் கடும் கண்டனம்
அண்டை நாடான லெபனா னில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனா னில் உள்ள ‘ஹிஸ்புல்லா’ அமைப்பி னரை இலக்கு வைத்தே இந்தத் தாக்கு தல்கள் நடத்தப்படுவதாக இஸ்ரேல் கூறினாலும், அங்கு அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் கொன்று குவிக் கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், லெபனானில் சனி யன்று இஸ்ரேல் நடத்திய தாக்குத லில் 3 பத்திரிகையாளர்கள் கொல்லப் பட்டதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் நாட்டு வெளியுறவு அமைச்சர் அப் பாஸ் அராக்சி ஞாயிறன்று அதிகா ரப்பூர்வ டெலிகிராம் பக்கத்தில் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “லெபனா னில் 3 பத்திரிகையாளர்களை இஸ் ரேல் கொடூரமாகக் கொன்றுள்ளது. இக்கொலைகள் திட்டமிட்டு நடத்தப் பட்ட படுகொலைகள் ஆகும். குறிப் பாக, இது சர்வதேசச் சட்டங்களை மிக மோசமாக மீறும் செயலாகும்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார். பலியான 3 பத்திரிகையாளர்கள் எந்தச் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த வர்கள் என்பது குறித்த தகவல் இது வரை வெளியாகவில்லை.
டெஹ்ரான் ஈரான் மீது அமெரிக்கா பெரும் தாக்குதல் நடத்தத் திட்டம் நாடாளுமன்றச் சபாநாயகர் தகவல்
அமெரிக்கா பெரும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஈரான் நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஈரானின் அதி காரப்பூர்வச் செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ-விடம் (IRNA) அவர் மேலும் கூறுகையில், “மேற்கு ஆசியா வில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா ராஜதந்திர முயற்சிகளில் ஈடுபடுவது போலக் காட்டிக்கொண்டாலும், உண்மையில் அது ஒரு பெரிய தரைவழித் தாக்குத லுக்குத் திட்டமிட்டு வருகிறது. அமெ ரிக்க ஜனாதிபதி பொதுவெளியில் பேச்சுவார்த்தை மற்றும் சமரசத்திற் கான செய்திகளை அனுப்பி வரு கிறார். ஆனால், அதே வேளையில் ரக சியமாகத் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டங்களை வகுத்து வருகிறார். இதுவே உண்மை யாகும்” என அவர் கூறினார். இஸ்லாமாபாத்
பாகிஸ்தானில் எகிப்து, துருக்கி, சவூதி அரேபியா வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை
மேற்கு ஆசியாவில் நிலவிவரும் போர்ச் சூழல் மற்றும் அமை திப் பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்க, பாகிஸ் தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் (துணை பிரத மர்) தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஞாயிறன்று பாகிஸ்தான் தலை நகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத், துருக்கி வெளி யுறவு அமைச்சர் ஹக்கான் பிடான் மற்றும் எகிப்து வெளியுறவு அமைச் சர் பத்ர் அப்தெலாட்டி ஆகியோர் பங்கேற்று மேற்கு ஆசியப் போர் குறித்து விவாதித்தனர். மேற்கு ஆசியாவின் தற்போதைய பதற்ற மான சூழலில், இந்த நான்கு நாடு களின் சந்திப்பு அமைதி முயற்சிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
‘நலமாகவும், மன உறுதியுடனும் உள்ளேன் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கத்தைக் கைவிட வேண்டாம்’ அமெரிக்கச் சிறையிலிருந்து வெனிசுலா மக்களுக்கு நிக்கோலஸ் மதுரோ அறைகூவல்
காரகாஸ் வெனிசுலா நாட்டின் எண் ணெய் மற்றும் இதர வளங்களைக் கைப் பற்ற, அந்நாட்டு ஜனாதிபதி நிக் கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸைக் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கச் சிறப்பு அதிரடிப்படை கடத்தல் பாணியில் கைது செய்தது. போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட போலிக் குற்றச் சாட்டுகள் (நார்கோ டெரரிசம்) மூலம் கைது செய்யப்பட்டுள்ள நிக்கோலஸ் மதுரோ, சிலியா புளோரஸ் ஆகிய இருவரும் மூன்று மாதங்களாக நியூ யார்க் நகரில் உள்ள புரூக்ளின் சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறையில் இருக்கும் நிக்கோலஸ் மதுரோ வெனி சுலா மக்களுக்காகத் தனது டுவிட்டர் எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி யுள்ளதாவது: “நாங்கள் (நிக்கோலஸ் மதுரோ - சிலியா புளோரஸ்) நலமாகவும், மன உறுதியுடனும், அமைதியுடனும் இருக்கிறோம். உங்களுடைய தக வல்கள், செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் கடிதங்கள் எங்களை வந்த டைந்தன. நீங்கள் காட்டும் ஒவ்வொரு அன்புச் சொல்லும் ஆதரவும் எங்களது ஆன்மாவை நிறைப்பதோடு மட்டு மல்லாமல் வலுப்படுத்துகிறது. இன்று முன்னெப்போதையும் விட அதிக மாக, நாட்டின் அமைதி, தேசிய ஒற் றுமை, நல்லிணக்கம் மற்றும் மன் னிப்பைத் தொடர்ந்து வலுப்படுத்து மாறு கேட்டுக்கொள்கிறோம். யாரும் உரையாடல், சகவாழ்வு மற்றும் மரி யாதைக்குரிய பாதையிலிருந்து விலகிவிட வேண்டாம்; ஏனெனில் அதுவே தாய்நாட்டின் பாதை, அதுவே நன்மையின் பாதை.” இவ்வாறு வெனிசுலா மக்களுக்கு நிக்கோலஸ் மதுரோ அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும், நிக்கோலஸ் மது ரோவின் எக்ஸ் பக்கத்தில் இந்தப் பதிவை யார் செய்தது என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை. புரூக்ளின் சிறையில் 15 நிமிடங்கள் குடும்பத்தினருடன் பேச அனுமதி வழங்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், குடும்பத்தினர் மூலமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்க லாம் என்று செய்திகள் வெளியாகி யுள்ளன.
