நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த ஆண்டு சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாக தொடங்கிய 'ஜென் சி' போராட்டம், ஊழல் மற்றும் மோசமான பொருளாதார நிலைமைகள் குறித்த நீண்டகாலக் கோபத்தினால் மேலும் தீவிரமடைந்தது. நாடாளுமன்றம் மற்றும் அரசு அலுவலகங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அப்போது காணப்பட்ட பதற்றமான சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர துணை ராணுவ காவல் படையினருக்கு அப்போதைய பிரதமர் கே.பி.சர்மா ஓலி தலைமையிலான அரசு உத்தரவிட்டிருந்தது. இதில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையைத் தடுக்கத் தவறிய குற்றம்சாட்டில் நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேபாளத்தில் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்ற 24 மணிநேரத்திற்குள் கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
