வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அமெ. நீதிமன்றத்தில் ஆஜராகிறார்
அமெரிக்க ராணுவம் வெனிசுலா ஜனாதிபதி மதுரோவையும் அவரது மனைவியையும் கடத்தியது. அவர் போதைப்பொருள் கடத்தியதாக பொய்க் குற்றமும் சாட்டியது. இந்நிலையில் அவர் தன் மீதான பொய் குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்யக் கோரி நியூயார்க் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த விசாரணையில், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் புனையப்பட்டவை என தெரி வித்திருந்தார். மதுரோவின் சட்டச் செலவுகளை செலுத்துவதை தடுத்து அவரது உரிமைகளை அமெரிக்கா மீறுவதாக மதுரோவின் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கதேச ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் பலி
வங்கதேசத்தில் பத்மா நதியை கடக்க, போக்குவரத்து படகில் ஏறுவதற்காகக் காத்திருந்த பேருந்து ஒன்று ஆற்றில் தலைகீழாகப் பாய்ந்து சுமார் 9 மீட்டர் ஆழத்தில் மூழ்கியது. இவ்விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பேருந்தில் 40 பயணிகள் இருந்த நிலையில் 5 குழந்தைகள், 11 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 22 உடல்களை மீட்புப் படையினர் மீட்டதாக முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூச்சுத்திணறலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் கடற்படைத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
ஈரான் புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படைத் தளபதி அலிரேசா தங்சிரியை கொலை செய்து விட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தங்சிரி மற்றும் கடற்படைப் பிரிவின் பிற உயர்மட்ட அதிகாரிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலில் இந்த கொலைகள் நடந்ததாக பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். தங்சிரி கொல்லப்பட்டதை ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஏற்கெனவே பல ராணுவத் தளபதிகளை இழந்துள்ள ஈரானுக்கு இது மற்றுமொரு பின்னடைவாக அமையும் என கூறப்படுகிறது.
மனிதாபிமான ஒற்றுமையை அமெரிக்காவால் தடுக்க முடியாது கியூபா சென்றடைந்தது நிவாரணப் படகு
ஹவானா, மார்ச் 26- உணவு, சூரிய ஒளித் தகடுகள் என 30 டன் மனிதாபிமான உதவிப் பொருட்க ளுடன் நிவாரணப் படகு ஒன்று கியூபா சென்றுள்ளது. அமெரிக்காவின் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள கியூபாவிற்கு உதவி செய்ய “நமது அமெரிக்கா” (Nuestra América) என்ற பெயரில் படகுக் குழு ஒன்று அத்தியாவசியப் பொருட்களு டன் சென்றது. இக்குழுவின் கிராண்மா 2.0 என பெயரிடப்பட்ட முதல் படகு 11 நாடு களைச் சேர்ந்த 32 பயணிகளுடன் நான்கு இரவுகள், ஐந்து பகல்கள் பயணித்து செவ்வாயன்று கியூபா வின் ஹவானா துறைமுகத்தை சென்றடைந்தது. படகின் மின்சார அமைப்பில் ஏற்பட்ட சில கோளாறுகள் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டது. இல்லை என்றால் ஒரே நாளில் சென்ற டைந்து இருக்க முடியும் என கூறப்படு கிறது. உணவுப் பெட்டிகள், மருந்துகள், கியூபாவின் மருத்துவமனைகளின் மின் உற்பத்திக்காக 70-க்கும் மேற் பட்ட சூரிய ஒளித் தகடுகளை -சோலார் பேனல்களை -இப்பயணக்குழு கொண்டு சென்றுள்ளது. இப்படகை கியூப மக்கள் ஆரவா ரத்துடன் வரவேற்றனர். இது தொடர் பான காணொலியை உலகம் முழுவ தும் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டு கியூபா விற்கும் நிவாரணக் குழுவிற்கும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். வரலாற்றின் கைம்மாறு கியூபா சென்றடைந்த படகை வர வேற்று, குழுவினருக்கு கியூப மக்கள் நன்றி சொன்ன நிலையில், “நீங்கள் எங்களுக்கு நன்றி சொல்வதை விட, நாங்களும் உலகில் உள்ள அனைத்து சுதந்திர மக்களுமே கியூபாவிற்கு நன்றி சொல்ல வேண்டும். எங்களது கப்பல் மெக்சிகோவிலிருந்து புறப் படுவதற்கு முன்பே நாங்கள் சொன் னோம். இது வரலாற்றின் கைம்மாறு (Reciprocity). ஏனெனில் இந்த உல கிலேயே மிகவும் மனிதாபிமானமிக்க நாடாகவும் மனிதாபிமானமுள்ள மக்க ளாகவும் கியூபா திகழ்கிறது” என அக்குழுவில் பயணித்த தியாகோ அவிலா தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது: ஆப்பிரிக்காவில் எபோலா மற்றும் இத்தாலியில் கோவிட் பரவிய போது, ஹைட்டி, சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது அம்மக்களை பாதுகாக்க முதலில் களமிறங்கியவர்கள் கியூப மருத்துவர்கள் தான்.செர்னோபில் அணுசக்தி பேரழிவால் பாதிக்கப்பட்ட 26,000 குழந்தைகளுக்குச் சிகிச்சை அளித்த நாடும் இது தான். அது மட்டுமல்ல, தெற்குலக நாடு களின் விடுதலைப் போராட்டங்களு க்குத் துணை நின்ற நாடு. ஆப்பிரிக்கா வில் இனவெறிக்கு எதிராகப் போராட உதவி செய்தது. எனவே தான் இந்த உலகம் கியூபாவிற்குப் பெரிய அளவில் கடன்பட்டுள்ளது. இப்போது அந்த மனிதாபிமானத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம் இது. உலகின் கொடூரமான மற்றும் அழிவுகரமான நாடாக உள்ள அமெ ரிக்காவை தோற்கடிப்பது கடினம் தான், ஆனால் நாம் வெற்றி பெறுவோம். ஏனெனில், மனிதாபிமானத்தை ஒரு போதும் அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது என்பதை இந்தப் படகு நிரூ பித்துள்ளது. எந்தவொரு பேரரசை விடவும் சுதந்திரமான மக்களின் வலிமை மிக உயர்ந்தது என குறிப் பிட்டார். கியூபா அரசை எப்படியேனும் கவிழ்த்து விட வேண்டும். அந்நாட்டில் அமெரிக்க ஆதரவு அரசை அமைக்க வேண்டும் என டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். இதன் காரணமாக கியூபா மீதான தடைகளை அதிகரித்து அந் நாட்டை வரலாற்றிலேயே மிக மோச மான நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார்.கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் மின் உற்பத்தி செய்ய முடியாமல் நாடு முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் “நமது அமெரிக்கா” கப்பல் குழு செய்யும் உதவி, கியூபப் புரட்சியை பாதுகாப்பதற்கான நம்பிக் கையை அதிகரிப்பதாகப் பார்க்கப் படுகிறது.
