tamilnadu

img

இன்று மாநில முதலமைச்சர்களுடன்  பிரதமர் ஆலோசனை

இன்று மாநில முதலமைச்சர்களுடன்  பிரதமர் ஆலோசனை

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் அதன் தாக்கம் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களு டன் பிரதமர் மோடி வெள்ளியன்று மாலை காணொலி வாயிலாக ஆலோ சனை நடத்தவுள் ளார்.  ஈரான் - இஸ் ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழலால் இந்தியா வின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தித் தேவைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு, கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்ப டக்கூடிய சிக்கல்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்க ளின் முதலமைச்சர் இதில் பங்கேற்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.