திருநங்கைகள் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் ராஜினாமா
திருநங்கைகள் (உரிமைகள் பாது காப்பு) திருத்த மசோதா (2026) செவ்வாயன்று நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாநிலங்களவையில் புத னன்று குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்பு தல் அளிக்கப்பட்டது. குடியரசுத் தலை வர் ஒப்புதலுக்குப் பின்னர் திருநங்கை கள் திருத்த மசோதா விரைவில் சட்ட மாக உள்ளது. இந்நிலையில், மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநங்கைகள் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் அடுத்த டுத்து பதவி விலகியுள்ளனர். தென்னிந் தியப் பிரதிநிதி கல்கி சுப்பிரமணியம் மற்றும் வடகிழக்குப் பிராந்தியப் பிரதி நிதி ரிதுபர்ணா நியோக் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்த பின் கல்கி சுப்பிரமணியம் கூறுகையில், “திருநங்கை சமூகத்தின் குரல் ஒடுக்கப் படும் இடத்தில் அமர்ந்து என்னால் பணியாற்ற முடியாது. இந்த மசோதா எங்களை மீண்டும் இருண்ட காலத்திற்கே கொண்டு செல்லும்” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே போலரிதுபர்ணா நியோக்,“திருநங்கை சமூகத்தின் கருத்து களைக் கேட்காமல் கொண்டு வரப்பட்ட இந்த மசோதா, எங்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறது” எனத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு மசோதாவைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்க ளில் திருநங்கைகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் போராட்டங்க ளை அறிவித்துள்ளன. கல்கி சுப்பிர மணியம் மசோதாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
