tamilnadu

img

ஆந்திராவில் கோர விபத்து பேருந்து - லாரி மோதல் : 13 பேர் பலி

ஆந்திராவில் கோர விபத்து   பேருந்து - லாரி மோதல் : 13 பேர் பலி

அமராவதி ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில்  உள்ள மார்க்காபுரம் அருகே வியாழ னன்று அதிகாலை தெலுங்கானாவின் நிர்மலில் இருந்து ஆந்திராவின் விஞ்சமூரு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், கனிகிரி யிலிருந்து ஜல்லிக் கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியும் மீது நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். 25 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், காயமடைந்த அனைவரும் குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவ தாகவும் பிரகாசம் மாவட்ட பொறுப்பு ஆட்சியர் பி.ராஜா பாபு தெரிவித்துள்ளார். பேருந்து தான் காரணம்  வியாழனன்று அதிகாலை 5:30 மணி அளவில் மார்க்காபுரம் அருகே கல்குவாரி பகுதியில் உள்ள ஒரு வளைவில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்திற்கு பேருந்து தான் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிவேகத்தில் வந்த பேருந்தின் ஸ்டீயரிங் வீல் ஜாம் ஆனதால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்த லாரி மீது மோதியதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். நிவாரணம் மார்க்காபுரம் விபத்து சம்பவத்திற்கு குடியர சுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகி யோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும்,  காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும்  தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.