states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி

பிரதமர் மோடி நாட்டுக்கு அளித்த உரையில் நாடு பயங்கரவாதத்திற்கு எதிராக எவ்வாறு போராடுகிறது மற்றும் இந்திய ராணுவம் எவ்வாறு நாட்டிற்கு கேடயமாக நின்றன என்பது தொடர்பாக விரிவாகப் பேசினார். ஆனால், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பற்ற சூழலில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த மிருகத்தனமான தாக்குதல் குறித்த சில கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா

பிணந்தின்னிக் கழுகுகள், வினய் நர்வாலின் மனைவியை அவதூறாக பேசின. வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் மகளை கொச்சையாகப் பேசின. இப்போது கர்னல் சோபியா குரேஷியை பற்றி கேவலமாக பேசிக் கொண்டிருக்கின்றன. பாஜகவினர் அருவருப்பானவர்கள்.

மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்

கர்னல் சோபியா குரேஷி இஸ்லாமியர் என்கிற ஒரே காரணத்துக்காக பாகிஸ்தானிகளின் சகோதரி என அவரைக் குறிப்பிட்டு பாஜக அமைச்சர் விஜய் ஷா பேசி இருக்கிறார். அவரின் பேச்சுக்கு மேடையில் இருப்போரும் கை தட்டுகின்றனர். இத்தகைய அமைச்சர்களை வைத்துக் கொண்டு தேசப்பற்றுடன், கொடியை உயர்த்திப் பிடிப்பதால் என்ன பயன்?

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பாடம் கற்பித்ததாகத் தெரியவில்லை. ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பிடம் இந்தியா சரணடைந்துவிட்டது. இதுதான் உண்மை.