சீன அரசின் குளோபல் டைம்ஸ் டுவிட்டர் எக்ஸ் பக்கம் முடக்கம்
சீனாவின் அரசு ஊடகமான குளோ பல் டைம்ஸின் டுவிட்டர் எக்ஸ் கணக்கை ஒன்றிய மோடி அரசு புதன்கிழமை அன்று முடக்கியுள்ளது. தவறான தகவல்களை வெளியிட்டதன் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குளோபல் டைம்ஸ் மட்டுமின்றி துருக்கியின் டிஆர்டி வோர்ல்ட்-இன் டுவிட்டர் எக்ஸ் கணக் கும் இந்தியாவில் தடை செய்யப் பட்டுள்ளது. மே 7ஆம் தேதியே சீனாவில் உள்ள இந்திய தூதரகம், அதன் டுவிட்டர் எக்ஸ் பக்கம் மூலம் குளோபல் டைம்ஸ் நிறு வனத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட தாக செய்திகள் வெளியாகின. அதில், “டியர் குளோபல் டைம்ஸ் ஊடகத்துக்கு, தவறாக வழிநடத்தும் செய்திகளை வெளி யிடுவதற்கு முன்பு, உண்மைகளை சரிபார்த்து, உங்களின் ஆதாரங்களை குறுக்கு விசாரணை செய்து கொள் ளுங்கள் என்று நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம். பல பாகிஸ்தான் ஆதரவு தளங்கள், பொதுமக்களை தவ றாக வழிநடத்தும் நோக்கில் ‘ஆபரேசன் சிந்தூர்’ பற்றிய ஆதாரமற்ற தகவல்க ளை பரப்புகின்றன” என்று தெரிவித்தி ருந்தது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து ஒன்றிய மோடி அரசு சீன அரசின் குளோ பல் டைம்ஸ் டுவிட்டர் எக்ஸ் பக்கத்தை முடக்கியுள்ளது. முன்னதாக டுவிட்டர் எக்ஸ் நிறுவனம் மோடி அரசின் கோ ரிக்கைக்கு ஏற்ப அதன் குளோபல் கவர்ன் மெண்ட் அபையர் கணக்கு மூலமாக 8,000 கணக்குகளை முடக்கியது குறிப்பி டத்தக்கது.
21 நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து பிஎஸ்எப் வீரர் விடுவிப்பு
பாகிஸ்தானின் காவலில் இருந்த ஒரு பிஎஸ்எப் ஜவான் பூர்ணம் குமார் ஷா அட்டாரி யில் உள்ள இருதரப்பு எல்லை வழியாக இந்தியாவிடம் 21 நாட்களுக்குப் பிறகு புதனன்று காலை 10.30 மணிக்கு ஒப்ப டைக்கப்பட்டார். ஏப்ரல் 23 அன்று பாகிஸ்தானால் பூர்ணம் குமார் ஷா கைது செய்யப் பட்டார். 182ஆவது பிஎஸ்எப் பட்டாலிய னின் கான்ஸ்டபிளான பூர்ணம், இந்தி யாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையி லான ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி யில் விவசாயிகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தபோது தற்செயலாக எல்லையைத் தாண்டினார். பின்னர் அவர் பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பெரோஸ்பூர் செக்டாரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து பாகிஸ்தான் அதிகாரிகளால் பூர்ணம் குமார் கைது செய்யப்பட்டார். விவசாயிகளுடன் சென்றபோது பாகிஸ் தான் வீரர்களால் பூர்ணம் கைது செய் யப்பட்டபோது ராணுவ துப்பாக்கியுடன் சீருடை அணிந்திருந்தார். அவர் மேற்கு வங்கத்தின் ஹூக்ளியைச் சேர்ந்தவ ராவார்.
பஞ்சாப் : விஷச்சாராய பலி 23ஆக உயர்வு
பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரான அமிர்தசரஸ் அருகே உள்ள தெர்வால், மார்ரி, படல்பூரி, தல்வாண்டி, பங்காலி ஆகிய 5 கிராமங்க ளில் விஷச்சாராயம் குடித்தவர்களுக்கு தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை முதல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்ட நபர்கள் ஒவ்வொருவராக உயிரி ழந்து வருகின்றனர். இந்நிலையில், புதன்கிழமை அன்று மாலை நிலவரப்படி விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்ப தால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக, பஞ்சாப் மாநில முதல மைச்சர் பகவந்த் மான் பலியானவர்க ளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். குறிப்பாக அவர்களின் குடும் பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப் படும் எனக் கூறியதுடன், அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.