states

img

சிபிஎம் முதுபெரும் தலைவர் நேபாள்தேவ் பட்டாச்சார்யா காலமானார்

சிபிஎம் முதுபெரும் தலைவர்  நேபாள்தேவ் பட்டாச்சார்யா காலமானார்

பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் முகமது சலீம், ராமச்சந்திர தோம் அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க முன்னாள் மாநி லக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான நேபாள்தேவ் பட்டாச்சார்யா (73) செவ்வாய்க் கிழமை அதிகாலை 1:30 மணியளவில் கொல் கத்தாவில் காலமானார். தெற்கு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலக்குறைவால் மரணம டைந்தார். செவ்வாய்க்கிழமை காலை கொல் கத்தாவில் உள்ள சிபிஎம் மாநிலக்குழு அலுவ லகமான முசாபர் அகமது பவனில் செங்கொடி  போர்த்தப்பட்டு அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் முகமது சலீம், ராமச்சந்திர தோம், இடது முன்ன ணித் தலைவர் பிமன் போஸ் உள்ளிட்ட தலைவர்கள், கட்சி ஊழியர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் வடக்கு 24 பர்கா னாஸ் மாவட்டக் குழு அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மேற்கு வங்க மாநி லத்திற்கு அவர் ஆற்றிய பணியை எடுத்து ரைத்தார். பன்முக ஆளுமை நேபாள்தேவ் பட்டாச்சார்யா 1981 முதல் 1988 வரை மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டார். மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆதிக்கம் செலுத்திய முக்கியமான காலகட்டத்தில் மாநிலத்தை பிரதிநிதித்து வப்படுத்தினார். சுபாஷ் சக்ரவர்த்திக்குப் பிறகு இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) பொதுச் செயலாள ராகப் பதவியேற்றவர், 1979 முதல் 1986 வரை அப்பதவியில் இருந்தார். அவரது காலத்தில் எஸ்எப்ஐ நாட்டின் மாணவர் இயக்கத்தின் முன்னணி அமைப்பாக உருவானது. போக்குவரத்துத் தொழிலாளர் இயக்கத்தில் முக்கிய பங்காற்றிய அவர், 2022இல் அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலா ளர் கூட்டமைப்பின் (AIRTWF) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வடக்கு 24 பர்கா னாஸ் மாவட்ட சிஐடியுவின் தலைவராகவும் இருந்தார். அரசியல் தவிர, திரைப்பட இயக்குநராகவும் செயல்பட்ட பட்டாச்சார்யா, மிதுன் சக்ரவர்த்தி மற்றும் தேபாஸ்ரீ ராய் நடித்த ‘சகா’ (2000) படத்தை இயக்கியுள்ளார். பல்வேறு அமைப்புகள் இரங்கல் அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சம்மேளனம் (AIRTWF) வெளி யிட்ட அறிக்கையில், “தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு மிகப்பெரிய இழப்பு” என்று குறிப்பிட்டுள்ளது. தற்போதைய தலைவரான அவரது மறைவு தொழிலாளர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) கொடியை தாழ்த்தி அஞ்சலி செலுத்தி யுள்ளது. சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே,  பொதுச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் புரட்சிகர இயக்கத்தை முன்னேற்றுவதற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த வர்” என்று குறிப்பிட்டுள்ளனர். ஏப்ரல் 20இல் கொல்கத்தாவில் நடைபெற்ற பிரிகேட் பொதுக்கூட்ட தயாரிப்புப் பிரச்சா ரத்தில் கடைசியாக பங்கேற்றவர் நேபாள்தேவ் பட்டாச்சார்யா என்பது குறிப்பிடத்தக்கது.