தன்னார்வலர்களுக்கு பயிற்சி பாபநாசம்,
மே 14 - புதிய பாரத எழுத்தறி வுத் திட்டத்தின்கீழ் தன்னார்வலர்களுக்கான பயிற்சி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டார வள மையத்தில் நடந்தது. இப்பயிற்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ரா பங்கேற்றார். ஆசிரியர் தேன்மொழி பயிற்சியளித் தார். பாபநாசம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 24 தன்னார்வ லர்கள் பங்கேற்றனர். பாபநாசம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு முருகன் பயிற் சியை ஒருங்கிணைத்தார். மக்கள் குறைகேட்புக் கூட்டம் அரியலூர், மே 14 - அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடை பெற்ற மக்கள் குறை கேட்புக் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து 288 கோரிக்கை மனுக்கள் பெறப்படடன. கூட்டத்துக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து 288 மனுக்களை பெற்றார். பின்னர் அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தர விட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், மற்றும் அனைத்துத் துறை அலு வலர்கள் பங்கேற்றனர்
பாபநாசத்தில் ஜமாபந்தி
பாபநாசம், மே 15- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவ லகத்தில் கும்பகோணம் சார் ஆட்சியர் ஹ்ரித்யா விஜயன் தலைமையில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வருவாய் தீர்வாயம் (பசலி) 1434 நடந்தது. அய்யம்பேட்டை சர கத்திற்கு உட்பட்ட 25 கிரா மங்களுக்கான ஜமாபந்தி யில் பொது மக்களிட மிருந்து பல்வேறு கோரிக் கைகள் தொடர்பாக 107 மனுக்கள் பெறப்பட்டன. இதில் பாபநாசம் தாசில் தார் பழனிவேல், சார் ஆட்சி யரின் நேர்முக உதவியா ளர் பாக்கியராஜ், வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஜானகிராமன், வட்ட துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை தாசில்தார்கள், அய்யம் பேட்டை வருவாய் ஆய்வா ளர் கலாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வரதட்சணை கொடுமை: கணவர் கைது
அரியலூர், மே 14 - அரியலூர் மாவட்டம் கீழகோவிந்தபுத்தூர் பகுதி யைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி பிரபு (46). இவருக்கும் வளவெட்டி குப்பத்தைச் சேர்ந்த அனிதா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அடிக்கடி பிரபு, அனிதாவிடம் வரதட் சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கீழ கோவிந்த புத்தூர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு அனிதா என்ப வரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட தாகவும், அனிதா ஒன்பது மாத கர்ப்பிணியாக இருப் பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முதல் மனைவி அனிதா கொடுத்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீ சார் வழக்குப் பதிந்து பிரபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நமரங்கூர் கிராமத்தில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் அறந்தாங்கி,
மே 14 - புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அருகே திரு வாப்பாடியை அடுத்த நமரங்கூர் கிராமத்தில் ஸ்ரீ குருந் துடை அய்யனார் சுவாமி திருக்கோவில் உள்ளது. சித்திரை பௌர்ணமி திரு விழாவையொட்டி, இங்கு 3 ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் செவ்வாயன்று நடைபெற்றது. பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான் மாடு என பந்தயம் நடை பெற்றது. இதில் கரிச்சான் மாடு 2 பிரிவுகளாக பந்தயம் நடை பெற்றது. புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அறந்தாங்கி, பேராவூரணி, ஆவு டையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுக்கு 8 மைல் தொலைவிலும், நடுமாட்டுக்கு 6 மைல் தொலைவிலும், கரிச்சான்மாட்டுக்கு 5 மைல் தொலை விலும் என எல்கை முடிவு செய்யப்பட்டன. முதலில் நடை பெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 9 ஜோடி மாடு வண்டி களும், நடுமாடு பிரிவில் 12 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. கரிச்சான் மாட்டுப் பிரிவில் 20 ஜோடி மாடுகள் 2 பிரிவுகளாக கலந்து கொண்டன. பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமை யாளர்களுக்கு கேடயம், ரூ. 2 லட்சத்திற்கு மேல் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற சாரதிக்கு கொடி பரிசு, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பந்த யத்தை சாலையின் இருபுறமும் நின்று ரசிகர்கள் கண்டு ரசித்த னர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
கும்பகோணம், மே 14- தஞ்சாவூர் மாவட்ட பயணிகளின் கோரிக் கையை ஏற்று மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயிலில் கூடுதலாக இரண்டு சாதாரண பெட்டிகள் இணைக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. பாரம்பரியம் மிக்க மெயின் லயன் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம் வழியான ரயில் பாதையில், முன்பு மீட்டர் கேஜ் பாதையில் செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. 2011 ஆம் ஆண்டு அகல ரயில் பாதை மாற்றத் திற்குப் பின், இந்த ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட பயணி கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து 2017 ஆம் ஆண்டு ரயில்வே கால அட்டவணையில் தாம்பரம்-செங் கோட்டை இடையே கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக முன்பதிவில்லாத அந்த்யோதயா வகை ரயில் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளி யிடப்பட்டது. ஆனால் அந்த ரயில் இயக்கப் படவே இல்லை. எனவே செங்கோட்டைக்கான ரயில்வே இணைப்பு கோரி தொடர்ந்து டெல்டா பகுதி பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். 2023 ஆம் ஆண்டு மயிலாடுதுறை - திண்டுக்கல் இடையே இயக்கப்பட்ட ரயில் மதுரை, விருதுநகர், இராஜபாளையம் வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது. பகல் நேரத்தில் குறைந்த கட்டணத்தில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்ல இந்த ரயிலை பயணிகள் பெருமளவில் பயன் படுத்தி வந்தனர். வெறும் 12 இருக்கை பெட்டி கள் மட்டுமே இந்த ரயிலில் இணைக்கப்பட்டு இருந்தது. இதனால் கும்பகோணத்திலேயே ரயிலில் கூட்டம் நிரம்பி, நின்று கொண்டு பய ணிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே இந்த வண்டியில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உப யோகிப்பாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து கோரி வந்தனர். இதனிடையே சென்ற மாதம் மதுரையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான ரயில்வே சந்திப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று திருநெல்வேலி-செங்கோட்டை ரயில் பெட்டிகளின் எண் ணிக்கை உயர்த்தப்பட்டது. இதை சுட்டிக்காட்டி மயிலாடுதுறை-செங் கோட்டை ரயிலுக்கு பெட்டிகளை கூட்ட வேண்டும் என கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி, தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பா ளர்கள் சங்கம் மின்னஞ்சல் மூலம் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தது. தொடர்ந்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம்.எஸ்.அன்பழகனையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று தற்போது மே 27 ஆம் தேதி முதல் வண்டி எண்.16847/16848 மயிலாடு துறை - செங்கோட்டை விரைவு ரயிலில் கூடுத லாக இரண்டு சாதாரண பெட்டிகளை இணைத்து 14 பெட்டிகளுடன் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. பயணிகள் வசதி கருதி செங்கோட்டை ரயிலில் பெட்டி களின் எண்ணிக்கையை அதிகரித்த தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் நன்றி தெரிவித்தனர். இந்த ரயிலை மயிலாடுதுறை யில் இருந்து விழுப்புரம் வழியாக திரு வண்ணாமலை அல்லது காட்பாடி வரை நீட்டித்து இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை
கும்பகோணம், மே 14 - 171 வருட பாரம்பரியம் மிக்க கும்பகோணம், அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)-யில் இளநிலை பட்ட வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் மே 7 முதல் தொடங்கியுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் மாதவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் 16 துறைகளில் இளநிலை பட்ட வகுப்புகள் நடைபெறுகின்றன. பி.ஏ. பாடப்பிரிவில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், இந்தியப் பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், வரலாறு, பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்.சி பாடப்பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், புவியியல், தாவரவியல், புள்ளியியல், கணினி பயன்பாட்டியல், கணினி அறிவியல் போன்ற பாடங்களும், சுழற்சி 2-இல் பி.ஏ. பாடப்பிரிவில் ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்.சி. பாடப் பிரிவில் கணிதம், கணினி பயன்பாட்டியல், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கும் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.48 மற்றும் அனைத்து பிரிவினருக்கும் பதிவுக் கட்டணம் ரூ.2. இக்கல்லூரியில் மொத்தம் 1,330 மாணவர்களுக்கான சேர்க்கை இடங்கள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.
சிபிஎம் மூத்த தோழர் சிவபுரம் அ.ஆறுமுகம் காலமானார்
புதுக்கோட்டை, மே 14 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் சிவபுரம் அ.ஆறுமுகம் (91) வயது முதிர்வின் காரணமாக புதன்கிழமை காலமா னார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா, அரிமளம் ஒன்றியத்தில் உள்ள சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அ.ஆறு முகம். சிறு வயதிலேயே நமணசமுத்திரம் பஞ்சாலைத் தொழிலாளியாக இருந்து, சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் தொழி லாளர்களின் உரிமைகளுக்காக எண்ணற்ற போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவர் தோழர் ஆர்.உமாநாத் உடன் இணைந்து தொழிலாளர்களுக்காக வும், அப்பகுதி இனாம் விவசாயிகளுக்காக வும், விவசாயத் தொழிலாளர்களுக்காகவும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியாற்றிவர். தோழர் உமாநாத் இரண்டு முறை புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போதும், திருமயம் சட்டமன்றத் தொகுதியில் போட்டி யிட்ட போதும் தேர்தல் பணிகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் தோழர் அ.ஆறுமுகம். இந்நிலையில், வயது மூப்பின் காரண மாக தோழர் அ.ஆறுமுகம் தனது 91 ஆவது வயதில் இயற்கை எய்தினார். அவரது உட லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சண் முகம், ஜி.நாகராஜன், சு.மதியழகன், மாவட்டக் குழு உறுப்பினர் சி.அன்புமண வாளன், ஒன்றியச் செயலாளர்கள் ஆர்.வீ.ராமையா, ஜெ.வைகைராணி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.வீரமணி, கே.வெள்ளைச்சாமி, க.அடைக்கன் உள்ளிட் டோர் அஞ்சலி செலுத்தினர்.
சப்பரத் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே மோதல்: சாலை மறியல்
தஞ்சாவூர், மே 14 - சப்பரத் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற் பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்ட தால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் அருகே அம்மன் பேட்டை பகுதி ராஜேந்திரம் ஆற்காடு கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலய சப்பரத் திருவிழா செவ்வாய்க் கிழமை இரவு நடைபெற்றது. அப்போது போதையில் வந்த சிலர், சாலையை மறித்துக் கொண்டு தகராறு செய்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அதே கிராமத் தைச் சேர்ந்த எஸ்.ஸ்டாலின் (40) பெரிய கத்தியால் வெட்டப்பட்டார். தலையில் காயமடைந்த இவர் தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்றார். இதனிடையே, இச்சம்ப வம் குறித்து காவல்துறை யிடம் கிராம மக்கள் புகார் செய்தனர். ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கிராம மக்கள் தஞ்சாவூர் - திருவையாறு சாலையில் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருவை யாறு காவல் துணைக் கண் காணிப்பாளர் அருள்மொழி அரசு உள்ளிட்டோர் நிகழ் விடத்துக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தாக்கி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித் ததைத் தொடர்ந்து கிராம மக்கள் மறியல் போராட் டத்தை கைவிட்டனர்.
மாநில கேரம் போட்டிக்கு மே 17-இல் கரூர் மாவட்ட வீரர்களுக்கு தேர்வு
கரூர், மே 14 - தமிழ்நாடு கேரம் சங்கமும், விருதுநகர் மாவட்ட கேரம் சங்கமும் இணைந்து நடத்தும் 66 ஆவது தமிழ்நாடு மாநில ஜூனியர் மற்றும் இளைஞர் (Youth) கேரம் சாம்பியன்ஷிப் போட்டி மே 23, 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் கரூர் மாவட்ட வீரர், வீராங்கனைகளுக்கான தேர்வு போட்டி 17.05.2025 (சனிக்கிழமை) அன்று பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. ஆகவே கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் ஜூனியர் (U-18, 26.05.2007 அன்றோ அதன் பின்னறோ பிறந்தவராக இருக்க வேண்டும்). இளைஞர் (Youth) (U-21, 26.05.2004 அன்றோ அதன் பின்னறோ பிறந்தவராக இருக்க வேண்டும்). மாவட்ட தேர்வு போட்டியில் பங்குபெறும் சிறந்த வீரர், வீராங் கனைகள் மாநிலப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மாவட்ட தேர்வு போட்டியில் பங்கேற்று, மாநில போட்டியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டுமென கரூர் மாவட்ட கேரம் சங்க சேர்மன் எஸ்.மோகனரங்கன், மாவட்ட கேரம் தலைவர் முனைவர் சி.ராமசுப்ரமணியன், மாவட்டச் செயலா ளர் எஸ்.சுரேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்ட கேரம் சங்கப் பொருளாளர் வி.செந்தில்குமார் 9750991014 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு ஹால் டிக்கெட்
பெரம்பலூர், மே 14 - தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் புதன்கிழமை (மே 14) முதல் தேர்வுகூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிக ழாண்டில் மே, ஜூன் மாதம் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு நடை பெறுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில், தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை புதன்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து நுழைவுச் சீட்டை பெறலாம் என பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.