மே 20 அகில இந்திய வேலை நிறுத்தத்தை விளக்கி பிரச்சாரம்
திருச்சிராப்பள்ளி, மே 14 - விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த வேண்டும். ஒன்றிய-மாநில பொதுத்துறை நிறுவனங்களில் காலி யாக உள்ள லட்சக்கணக்கான பணி யிடங்களில் வேலையில்லா இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். கார்ப்பரேட் முதலாளி களுக்கு ஆதரவாக திருத்தப்பட்ட தொழிலாளர் நலச் சட்டத் திருத்த தொகுப்பை திரும்பப் பெற வேண்டும். நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 200 நாட்களாக்கி நகர்ப்பு றத்திற்கு விரிவாக்கம் செய்ய வேண்டும். விவசாயிகளுடைய விளைபொருட்களுக்கு கட்டுப்படி யான விலை கொடுத்து எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையை அமல் படுத்திட வேண்டும். மின்சாரம், போக்குவரத்து, ரயில்வே, வங்கிகள் இன்சூரன்ஸ் சுரங்கங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனி யார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20 ஆம் தேதி நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்ற னர். வேலைநிறுத்தத்தை விளக்கி தெருமுனை பிரச்சாரக் கூட்டம், திருச்சி மாவட்டம் தென்னூர் அரச மரத்தடியில் புதனன்று நடை பெற்றது. கூட்டத்திற்கு தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் குண சேகரன் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் நட ராஜா, தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜோசப் நெல்சன், யுடியு சியின் சிவசெல்வன், ஹெச்எம்எஸ் ஜான்சன், எல்எல்எப் தெய்வீகன், ஐஎன்டியுசி வெங்கட், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் க.சுரேஷ், சிஐ டியு மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். தொமுச சரவ ணன் நன்றி கூறினார். பின்னர் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் விநி யோகம் செய்யப்பட்டது. மன்னார்குடி மே 20 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் பிரச்சாரம் திருவா ரூர் மாவட்டம் மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே தேரடியில் நடை பெற்றது. பிரச்சாரத்திற்கு தொமுச வி.நீல மேகம், ஐஎன்டியுசி எஸ்.பாண்டியன், ஏஐடியுசி ஆர்.சந்திரசேகர ஆசாத், சிஐடியு எம்.கே.என்.ஹனிபா ஆகி யோர் தலைமை வகித்தனர். இந்தப் பிரச்சாரத்தில் தொ.மு.ச சார்பில் ஏ.பாலகிருஷ்ணன், ஆர்.ஜெயக் குமார், ஏஐடியுசி சார்பில் வி.கலைச் செல்வன், துரை அருள்ராஜன், எஸ். சரவணன், ஐஎன்டியுசி சார்பில் எஸ். முருகன், கே.சரவணன், சிஐடியு சார்பில் ஜி.ரகுபதி, டி.ஜெகதீசன் ஆகியோர் பேசினர். திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டியில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்த பிரச்சார இயக்கம் நடைபெற்று வரு கிறது. அதனொரு பகுதியாக திருத் துறைப்பூண்டி நகரத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. சிஐடியு சார்பில் கேபி. ஜோதிபாசு, பிஎன்.லெனின், யு. ராமச்சந்திரன், ஏ.கே.செல்வம், எம்.பி.கே.பாண்டியன், என்.பவுன்ராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். நாகுடி மே 20 அகில இந்திய வேலை நிறுத்தத்தை விளக்கி புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கல்லணை கால்வாய் பாசானதாரர் சங்கத் தலை வர் கொக்குமடை ரமேஷ் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் குமார், தென்றல் கருப்பையா, கணேசன், ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன், மாதவன், செல்வராஜ், ராஜேந்தி ரன், ராமச்சந்திரன், அருள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.