tamilnadu

img

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பெரம்பலூர் கிளை சார்பில்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று மேற்பார்வை மின் பொறி யாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டி.எஸ்.சம்பத் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ரெ. இராஜகுமாரன், ப.முத்துசாமி ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் பி. கிருஷ்ண சாமி வாழ்த்துரை வழங்கினார். சி.கண்ணை யன் நன்றி தெரிவித்தார். 8 ஆவது ஊதிய குழுவின் பரிந்துரை களை ஓய்வூதியர்கள் அனைவருக்கும் வழக்கம்போல் நடைமுறைப்படுத்த வேண்டும்.  மின்வாரியம் உட்பட அனைத்து பொதுத் துறைகளையும் தனியார் மயமாக்க கூடாது.  ஓய்வூதியத்தை தமிழக அரசே நேரிடையாக  பொறுப்பேற்று வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மின்வாரி யமே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும். நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் 50 சதவீதம்  ஒப்பந்த பணிக் காலத்தை நிரந்தர பணிக் காலத்தோடு சேர்த்து கணக்கீடு செய்து ஓய்வூ தியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமத்தில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் காசிநாதனின் மகன் லெனின், கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது உருவப் படத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் திறந்து வைத்து மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் எம்.வேல்முருகன் தலைமையில் நிர்வாகிகள், மற்றும் கிளை நிர்வாகிகள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.