வடுகச்சேரியில் நூறுநாள் வேலையை தொடங்குக!
விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம், மே 14- நாகப்பட்டினம் ஒன்றியம் வடுகச்சேரி ஊராட்சியில் நூறு நாள் வேலை தொடங்கக் கோரி அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தினர் ஒன்றியப் பொருளாளர் ஏ. சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம். முருகையன் கண்டன உரை யாற்றினார். ஒன்றியச் செயலாளர் கே.செந்தில்குமார், ஒன்றியத் தலைவர் வி.ராதா உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். வேலையின்றி தவிக்கும் கிராமப்புற மக்களுக்கு உடனடியாக நூறு நாள் வேலையை தொடங்கிட வேண்டும். இதுவரை செய்த வேலைகளுக்கு ஊதி யத்தை விடுவிக்க வேண்டும். வடுகச் சேரி ஊராட்சியில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளுக்கு விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கட்டி முடிக்கப் பட்ட வீடுகளுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க கோரியும், மெத்தனமாக செயல்படும் நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.