tamilnadu

img

குடவாசலில் முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

குடவாசலில் முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

மே 17-தோழர் கோ.வீரய்யன் சிலை திறப்பு

திருவாரூர், மே 14 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வாரூர் மாவட்டம் குடவாசல் அலுவல கத்தில் தியாகி சி.தங்கையன் நினைவகத் தில் செவ்வாயன்று குடவாசல் நகரக் குழு,  ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிளைச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு பெரும்பண்ணையூர் கிளைச் செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் பேசுகையில், “மே 17 ஆம் தேதி நடைபெறும் தோழர் கோ.வீரய்யன் சிலை திறப்பு விழாவில், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்று ஜிவீ சிலையை திறந்து வைக்க  உள்ளார். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் வி.பி.நாகைமாலி செங்கொடி ஏற்ற  உள்ளார். கல்வெட்டை மூத்த தோழர் டி. அய்யாறு திறந்து வைப்பது உள்ளிட்ட நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிப்  பணிகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றி னார். முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.சுந்தரமூர்த்தி உரையாற்றினார். குட வாசல் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர், ஒன்றியச் செயலாளர்கள் டி.லெனின் (தெற்கு) கே.அன்பழகன் (வடக்கு) மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.லட்சுமி,  பா.லெ.சுகதேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதும்பெரும் தலைவர் தோழர் கோ. வீரய்யன் சிலை திறப்பு விழா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில  இந்திய 24 ஆவது மாநாடு அரசியல் தீர்மான  விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்ச்சியை விளக்கி வாகனப் பிரச்சாரம் செய்வது, திருவா ரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றி யங்களில் இருந்தும் வாகனங்களில் பங்கேற் பது, தோழர்களை பெருவாரியாக திரட்டு வது குறித்து பேசப்பட்டது.  மே 17 அன்று நடைபெறும் ஜிவீ சிலை திறப்பு மற்றும் பொதுக்கூட்ட நிகழ்வில் கட்சி யின் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் மற்றும்  மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப் பினர்கள் பங்கேற்க உள்ளனர்.