world

தீக்கதிர் உலக செய்திகள்

உலக அளவில் காற்று மாசு இந்தியாவுக்கு 6 ஆவது இடம்

2025 ஆம் ஆண்டிற்கான ‘உலகக் காற்றுத் தர அறிக்கை யை’ (World Air Quality Report) சுவிஸ் நிறுவனமான IQAir வெளியிட்டுள்ளது. அதில் உலக அளவில் மிகவும் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 6 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.  இந்தியாவின் சராசரி PM2.5 (நுண் துகள்கள்) அளவு கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. 2023 இல் 54.4 µg/m³ ஆக இருந்த அளவு, 2025-ல் 48.9 µg/m³ ஆகக் குறைந்துள்ளது (3% சரிவு). இது உலக சுகாதார நிறுவனம் (WHO) நிர்ண யித்துள்ள அளவை விட இது மிக அதிகம். அதேபோல உலகின் மிக மோசமான 20 மாசுபட்ட நகரங்களில் 17 நகரங் கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட மத்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்திலேயே உள்ளன.

ஒன்றிய அரசின் மெத்தனம் பலியாகும் குழந்தைகளின் எதிர்காலம்

‘கன்ஜெனிட்டல் ஹைப்போ தைராய்டிசம்’ (CH) பாதிப்பால், ஆண்டுதோறும் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நிரந்தர மூளை வளர்ச்சிக் குறைபாட்டிற்குத் தள்ளப்படுகின்றனர்.குழந்தை பிறந்த 14 நாட்களுக்குள் ‘யுனிவர்சல் ஸ்கிரீனிங்’ (Universal Newborn Screening) எனப்படும் ரூ.50 மட்டுமே செலவாகும் பரிசோதனையை செய்தால் இதனை எளிதில் குணப்படுத்தி குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்து விடலாம். வளர்ந்த நாடுகள் கடந்த 60 ஆண்டுகளாக இந்த எளிய மருத்துவ முறையை பின்பற்றி வருகின்றன.  ஆனால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இந்த மருத்துவ சோதனை  இன்னும் கட்டாயமாக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கத் தேவையான நிதி மற்றும் கொள்கை முடிவுகளை எடுப்பதில் அரசு சுணக்கம் காட்டி வருகிறது.  உரிய நடவடிக்கை இல்லாததால் பாதிக் கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்கள் வாழ்நாள் முழுவதும் மருத்துவச் செலவுகளுக்கும், பராமரிப்புச் செலவுகளுக்கும் ஆளாகின்றனர். இது ஏற்கெனவே பொருளாதார ரீதியாகப் பின் தங்கியுள்ள குடும்பங்களை மேலும் வறுமைக்குத் தள்ளுகிறது.