மத்திய கிழக்குப் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது அந்நாட்டு அரசு.
வளைகுடாப் பகுதிகளில் இருந்து 98% எண்ணெயை இறக்குமதி செய்து வரும் பிலிப்பைன்ஸில், மத்திய கிழக்குப் போர் காரணமாக கடந்த பிப்ரவரி 28 முதல் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் இரு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளன. தற்போது, எரிபொருள் கையிருப்பு வெறும் 45 நாட்களுக்கு மட்டுமே இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளதாலும், எரிபொருள் இருப்பு வேகமாகக் குறைந்து வருவதாலும், இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க, அந்நாட்டு ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், நாடு முழுவதும் தேசிய எரிசக்தி அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.
