“முதல் ஐம்பது ஆண்டுகள் தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்” எனும் நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள எழுத்தாளரும் செம்மலர் மாத இதழின் ஆசிரியருமான ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு பாராட்டு நிகழ்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்கதிர் இடைக்கமிட்டி சார்பில் மதுரை தீக்கதிர் வளாகத்தில் மார்ச் 25 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். தீக்கதிர் சிறப்பாசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், முன்னாள் ஆசிரியர் வி.பரமேசுவரன், விவசாயத்தொழிலாளர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் ஏ.லாசர், செம்மலர் மூத்த ஆசிரியர் தி.வரதராசன், சிபிஎம் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.பாலா, தமுஎகச மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீரசா, தீக்கதிர் செய்தி ஆசிரியர் அ.மாரிமுத்து ஆகியோர் பாராட்டுரையாற்றினர். எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஏற்புரையாற்றினார். இடைக்கமிட்டி செயலாளர் ஜோ.ராஜ்மோகன் நன்றி கூறினார்.
