states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை முற்றிலும் புறக்கணித்து அவர்களை சுரண்டுவதிலும், கொள்ளையடிப்பதிலும் ஒன்றிய பாஜக அரசு கவனம் செலுத்துகிறது. மோடி அரசு நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளைச் சிதைத்துள்ளது. அதன் நேரடி விளைவுகளை 140 கோடி இந்தியர்கள் அனுபவித்து வருகின்றனர்.

ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா

மத்திய ஆயுதக் காவல் படைகள் மசோதா மிகவும் கொடியது. இதனை நிறைவேற்றிய பிறகும் போராட்டம் முடிந்துவிடவில்லை என்பதை ஆயுதப் படைகளுக்கும், அதிகாரிகளுக்கும் தெரிவிப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன.

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

மத்திய ஆயுதக் காவல் படைகள் மசோதா தொடர்பாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தோம். மசோதாவை விவாதத்திற்காக நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பக் கோரினோம். ஆனால் அரசாங்கம் தன்னிச்சையாகச் செயல்படுகிறது. அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.

சிபிஎம் டம் டம் வடக்கு வேட்பாளர் தீப்சிதா தர்

சிபிஎம் கட்சியானது தேர்தல் ஆதாயங்களை அறுவடை செய்வதற்காக செயல்படும் கட்சி அல்ல. மாறாக பாதிக்கப்பட்டவருக்கு நீதி கேட்டு அந்தக் குடும்பத்திற்கு ஆதரவாக வீதிகளில் இறங்கி போராடும் கட்சி.