இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக கேரளத்தில் தேஜஸ்வி பிரச்சாரம்!
முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்பு திருவனந்தபுரம், ஏப்.1 - ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டி ரிய ஜனதாதளம் கட்சித் தலைவரும் - பீகார் சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலை வருமான தேஜஸ்வி பிரசாத், ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக, கேரளத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பொன்னானி தொகுதி யில் (மலப்புரம்) போட்டி யிடும் சிபிஎம் வேட்பாளர் எம்.கே.சகீரை ஆதரித்து செவ்வாயன்று தேஜஸ்வி பிரச்சாரம் மேற்கொண்டார். “கேரளத்தில் மதச்சார் பற்ற சக்திகளை ஒன்றி ணைக்க இடது ஜனநாயக முன்னணியை மீண்டும் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இது கேரள மாநி லத்திற்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த நாட்டிற்கும் நல் லது. தனது தந்தை லாலு பிரசாத் சமூக நீதிப் பாதை யில், பாசிச சக்திகளுக்கு எதிராகத் தென்னிந்தியாவில் வலுவான குரலைப் பதிவு செய்தார். அவரின் வழி யிலேயே நானும் இப்போது பாசிச சக்திகளுக்கு எதிராக களமிறங்கியுள்ளேன்” என பிரச்சாரத்தின் போது தேஜஸ்வி குறிப்பிட்டார். கேரள மக்களுக்கு பாராட்டு தேஜஸ்வி பிரசாத் வழக்கமாக இந்தியில் உரை யாற்றுவார். ஆனால் கேர ளத்தில் அவர் சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். இதற்கு கேரள மக்கள் வர வேற்பு தெரிவித்தனர். இதுகுறித்து, தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட தேஜஸ்வி, “கேரள மக்கள் அளித்த அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். பினராயி விஜயன் தேஜஸ்வியின் பிரச்சா ரத்தை கேரள முதலமைச்ச ரும், சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன் தமது சமூகவலைதளப் பக்கத்தில் வரவேற்றுப் பாராட்டியுள் ளார். “கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி தேர்தல் பிரச்சாரத்தில் இணைந்து ஆதரவு தெரி வித்த தேஜஸ்வி பிரசாத் அவர்களுக்கு நன்றிகள். உங்களின் வருகையும் ஆதரவும் நமது மதச்சார்பற்ற கட்டமைப்பைப் பாதுகாக்கவும், மக்கள் நலனுக்கான மாற்றுக் கொள்கைகளை முன்னெ டுத்துச் செல்லவும் நாம் மேற்கொள்ளும் கூட்டுப் போராட்டத்திற்கு வலு சேர்க்கிறது. ஒன்றிணைந்து கேரள மக்களின் மகத்தான வெற்றியை உறுதி செய்வோம்” என அவர் கூறியுள்ளார்.
