‘ஜிஎல்பி-1’ மருந்துகளுக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடு
‘டைப் 2’ நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமனைச் சரி செய்ய ‘ஜிஎல்பி-1 (GLP-1)’ மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன. இந்திய சந்தையில் சமீபகால மாக இந்த ஜிஎல்பி-1 மருந்துகளின் பல்வேறு வகைகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. தற்போது மருந்தகங்கள், ஆன்லைன் தளங்கள், மொத்த விற்பனை யாளர்கள் மற்றும் நல்வாழ்வு மையங்கள் மூலம் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி ஜிஎல்பி-1 எளிதாகக் கிடைப்பது கவ லைகள் ஏற்படுத்தியுள்ளன. இதற்கு மருந்து தயாரிப்பு சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஜிஎல்பி-1 மருந்துக ளுக்கு ஒன்றிய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. அதில்,” ஜிஎல்பி-1 மருந்து கள், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந் தால் மட்டுமே வழங்கப்பட வேண்டும். இவை கடுமையான பக்கவிளைவுக ளைக் கொண்டிருப்பதால், தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணரின் மேற்பார்வையில் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட வேண் டும். விதிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய் யப்படும், அபராதம் விதிக்கப்படும் மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கை கள் எடுக்கப்படும்” என ஒன்றிய அரசு புதனன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
