states

img

எல்டிஎப் ஒருபோதும் வகுப்புவாத சக்திகளுடன் கைகோர்க்காது எம்.வி.கோவிந்தன் உறுதி

எல்டிஎப் ஒருபோதும் வகுப்புவாத சக்திகளுடன் கைகோர்க்காது எம்.வி.கோவிந்தன் உறுதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கேரள மாநிலச் செயலா ளர் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் செவ்வாயன்று முதல் தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தை துவங்கினார்.  செவ்வாயன்று காலை திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் சட்டமன்ற தொகுதி இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஏ.சி.மொய்தீனுக்கு (சிபிஎம்) ஆதரவாக நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் எம்.வி.கோவிந் தன் உரையாற்றினார். அவருக்கு குன்னங்குளம் மக்கள், சிபிஎம் உள்ளிட்ட  எல்டிஎப் கூட்டணிக் கட்சி ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  தொடர்ந்து செவ்வாயன்று மாலை வடக்காஞ்சேரி சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “எல்டிஎப் எந்தவிதமான வகுப்புவாத சக்திகளுடனும் கைகோர்க்கவில்லை. நாங்கள் தெளிவான அரசியல் கொள்கை யின் அடிப்படையிலேயே தேர்தலைச் சந்திக்கிறோம். செய்தியாளர்கள் கேள்வி களுக்குப் பின்னால் ஒரு குறிப்பிட்ட உள்நோக்கம் உள்ளது” என அவர் உறுதியாக கூறினார்.