tamilnadu

img

தொழிலாளர் விரோதச் சட்டங்களை அமல்படுத்திய மோடி அரசு தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய கருப்பு நாள் கடைப்பிடிப்பு!

தொழிலாளர் விரோதச் சட்டங்களை அமல்படுத்திய மோடி அரசு  தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய கருப்பு நாள் கடைப்பிடிப்பு!

புதுதில்லி, ஏப். 1 - இந்திய தொழிலாளர்களுக்கு விரோ தமான நான்கு தொகுப்புச் சட்டங்களை ஏப்ரல் 1 முதல் மோடி அரசு அமல் படுத்திய நிலையில், அதற்கு எதிராக மத்தியத் தொழிற்சங்கங்கள் நாடு முழுதும் கருப்பு தினம் கடைப்பிடித்தன. சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் சுயேச்சையான துறைசார் சம்மேளனங்கள் மற்றும் சங்கங்களின் மேடையின் அழைப்பின் பேரில், தொழி லாளர்கள் இப்போராட்டத்தை நடத்தினர். கருப்புப் பட்டைகள், கருப்புத் தலைப்பட்டைகளை அணிந்தும், பல இடங்களில் கருப்புக் கொடிகளு டன் மிதிவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் பேரணிகளுடன் ஆர்ப்பாட்டங் கள், தர்ணாக்களையும் தொழிலா ளர்கள் நடத்தினர். முதலாளிகளுக்குச் சாதகமான, தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை யும் ரத்து செய்ய வேண்டும்; முத்தரப்பு ஆலோசனைகளுக்காக இந்தியத் தொழிலாளர் மாநாட்டை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்திய அரசமைப்புச்சட்டத்தின் பொதுப் பட்டியலில் தொழிலாளர் பிரிவு இடம்பெற்றிருப்பதால், 44 மத்திய சட்டங்களையும், மாநில சட்டமன்றங் கள் மூலம் சுமார் 150 சட்டங்களையும் நம்மால் வென்றெடுக்க முடிந்தது. இவை அனைத்தும், சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் தொழிலாளர் சார்பு அரசியல் சக்திகளின் ஆதர வுடன் தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டங்களின் மூலம் அடையப்பட்டன. இவை அனைத்தும் ஒன்றிய அரசில் உள்ள தற்போதைய ஆளும் பாஜக ஆட்சியால் ஏப்ரல் 1 முதல் சீர்குலைக்கப் படப் போகின்றன. இந்த சட்டத் தொகுப்புகள் மூலம் தொழிலாளர் களை அடிமைத்தனமான நிலைக்குத் தள்ளுவதே அவர்களின் நோக்கமாக உள்ளது. இந்திய அரசியலமைப்பின் நோக்கத்திற்கும், சர்வதேச தொழி லாளர் தர நிர்ணயங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான பிரிவுகளும் இந்தச் சட்டத் தொகுப்புகளில்உள்ளன. 1926ஆம் ஆண்டில் உறுதி செய்யப் பட்ட தொழிற்சங்க உரிமைகள், தொழி லாளர்களுக்கான கண்ணியமான ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு, நிரந்தரப் பணிகளில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல், சம வேலைக்கு சம ஊதியம், ஊக்கத் தொகை, பணிக்கொடை மற்றும் ஓய்வூ திய உரிமைகளை மோடி அரசின் சட்டங் கள் பறிக்கின்றன. இதற்கு எதிராக, 2026 பிப்ரவரி 12  அன்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பொது வேலைநிறுத்தம் மற்றும் தொழிலாளர்கள், விவசாயிகளின் மாபெரும் போராட்டங்களுக்குப் பிற கும், ஒன்றிய பாஜக அரசு ‘வணிகம் செய்வதை எளிதாக்குதல்’ என்ற பெய ரில் தனது கார்ப்பரேட்டுகளுக்குச் சாதக மான கொள்கைகளைத் தொடர்கிறது. எனவே தான், இந்தத் தொழிலாளர் சட்டங்களை ‘ஏற்க முடியாது’ என்று கூறியும், அவற்றின் அமலாக்கத்திற்கு எதிராகவும், அரசாங்கத்தின் தொழி லாளர் விரோத, விவசாயி விரோத மற்றும் தேச விரோதக் கொள்கைகளை எதிர்த்து இறுதிவரை போராடுவோம் என்ற தங்களின் உறுதியைக் காட்டும் வகையில், தொழிலாளர்கள் புதன்கிழ மையன்று நாடு முழுவதும் கருப்பு தினம் கடைப்பிடித்தனர்.  இதனிடையே, “வரும் நாட்களில் இன்னும் பெரிய போராட்டங்களுக்குத் தயாராக  இருக்கு மாறு” தொழிலாளர்களை மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.             (ந.நி.)